மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபுதேவா..!!

Read Time:1 Minute, 41 Second

201709231125320039_Prabhu-Deva-again-joins-with-Vijay_SECVPFஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த படம் ‘தேவி’. இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். திகில் கலந்த பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது மீண்டும் புதிய படம் மூலம் இணைந்திருக்கின்றனர்.

இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

மதன் கார்க்கியின் வரிகளுக்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

இந்தியில் ‘லவ் இன் டோக்யோ’, ‘ஜூகுனு’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ‘பிரமோத் பிலிம்ஸ்’ நிறுவனனும், சினிமா தயாரிப்பிலும் விநியோகத்திலும் பிரபலமான ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவிச்சந்திரனும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சாமியார் கைது..!!
Next post றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்..!! (கட்டுரை)