குழந்தை பிறப்புக்குப் பிறகு உங்கள் பாலியல் விருப்பத்தை மீண்டும் பெற சில குறிப்புகள்..!!
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தருணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கும் தருணமாகும். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்கள் தூக்கம், உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் மட்டுமின்றி பாலியல் விருப்பமும் இந்தக் காலகட்டத்தில் குறைகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் முதல் களைப்பாக இருப்பது வரையிலான பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வர, ஓரிரு வாரங்களோ, சில மாதங்களோ சில ஆண்டுகளோ கூட ஆகலாம். ஆனால் இந்த இடைவெளியைக் குறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் பாலியல் விருப்பத்தை மீண்டும் பெற சில வழிகள் உள்ளன:
களைப்பைப் போக்க முயலுங்கள் (Fight fatigue)
களைப்புதான் முதலில் அணுக வேண்டிய பிரச்சனை. உங்களுக்கு பிறந்த குழந்தை இருந்தால், குழந்தைக்குப் பாலூட்ட எப்போதும் நீங்கள் அருகில் இருக்க வேண்டும், டயப்பர் மாற்ற வேண்டும், குளிக்க வைக்க வேண்டும், அவ்வப்போது தூங்க வைக்க வேண்டும், இன்னும் பல வேலைகள் உள்ளன. இதனால் உங்கள் ஆற்றல் முழுதும் செலவாகி, நீங்கள் எளிதில் களைப்படையலாம். களைப்பை எதிர்த்துப் போராட, நீங்களும் உங்கள் இணையரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே இதற்கு வழியாகும். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைகளை ஒருவர் மாற்றி ஒருவர் சிறிது நேரம் ஒதுக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும், இதனால் இருவரும் ஓரளவு ஓய்வெடுக்கலாம், இதனால் உங்கள் காதலுக்கும் மனநிலை தயாராகும்.
பேசுங்கள் (Communicate)
இணையர்களுக்கு இடையிலான அன்னியோன்னியம் மிகவும் முக்கியமாகும். அதற்கு அவர்களிடையே ஒளிவுமறைவில்லாத தகவல் பரிமாற்றம் அவசியமாகும். இந்த சமன்பாட்டிலிருந்து பாலியல் உறவை அகற்றுவதால், இணையரில் ஒருவர், குறிப்பாக பெண்ணுக்கு தன்னுடைய உடல் பல மாற்றங்களை எதிர்கொள்வதால், தன்னுடைய இணையரை நோக்கிய பாலியல் கவர்ச்சி அவருக்குக் குறையக்கூடும். உங்கள் இணையர் உங்கள் உங்களுக்கு முக்கியமானவர் என்றும், அவரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றும் அவர் உணரும் விதத்தில் அவரிடம் பேசுங்கள்.
எப்போதும் தொடர்பில் இருங்கள் (Stay connected)
அவ்வப்போது காதலுடன் உங்கள் இணையரை சீண்டுதல், கொஞ்சுதல், கைகளைப் பிடித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்து, உங்கள் நெருக்கத்தை எப்போதும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இருவருமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள தங்களால் முடிந்த அளவு நேரம் ஒதுக்க வேண்டும், அதே சமயம் தங்களுக்குள்ளான நெருக்கத்தையும் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தயாராகுங்கள் (Get Ready)
உங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும்போது, அவசரப்பட வேண்டாம், பரபரப்பாக செயலில் இறங்க வேண்டாம். ஓர் அருமையான குளியல் போட்டு உங்கள் மனநிலையைத் தயார்ப்படுத்துங்கள், அதற்கான நல்ல மனநிலையைப் பெற்ற பிறகு தொடங்குங்கள்! பாலியல் உறவில் ஈடுபடுவது உங்களுக்கு சௌகரியமாகவும் அதற்கு நீங்கள் தயாராகவும் இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் (Talk to your doctor)
உங்களுக்கு வழக்கத்தை விட பாலியல் விருப்பம் அளவுக்கு அதிகமாகக் குறைந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏதேனும் பிரச்சனை உள்ளதா எனக் கண்டறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். சிலசமயம், உங்களிடம் ஏதோ சரியில்லை என்ற எண்ணமே மன அழுத்தத்தைக் கொடுத்து பாலியல் விருப்பத்தைக் குலைத்துவிடக்கூடும். இது சாதாரணம் தான் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வதே கூட உங்கள் பாலியல் விருப்பத்தை மேலும் அதிகரிக்க உதவக்கூடும்.
Average Rating