அதிக நேரம் தூங்கினால் உடலுறவில் நாட்டம் குறைந்துவிடுமாம்… தெரியுமா உங்களுக்கு?…!!

Read Time:1 Minute, 54 Second

201709211350242724_health-affects-of-over-sleeping_SECVPF-333x250சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் ‘தூக்கப் பிரச்னை என்று நினைப்பது தவறு. அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிக நேரம் தூங்குவதால் மனஅழுத்தம் குறையும். உடல் இயக்கம் சீராக இருக்கும் என்பதெல்லாம் சரி தான். ஆனாலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதும் இயல்பான விஷயம் கிடையாது.

அப்படி நீண்ட நேரம் தூங்கினால் என்ன மாதிரியான பிரச்னைகள் உண்டாகும்?…

இரவுத் தூக்கத்தின்போது ஸ்லீப் ஆப்னியாவினால், மூளைக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடர் போல நீண்டுகொண்டே போகும்.

இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு உடலுறவின் மீதான ஈடுபாடும் குறையத் தொடங்கும்.

அதுமட்டுமில்லாது, அதிக நேரம் தூங்கிவிட்டால், அந்த பழக்கமானது பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான சமயங்களில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

ஸ்லீப் ஆப்னியா பிரச்னை அதிகமாகாமல் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லையென்றால், ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்து பல பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெருவில் சண்டை போடும் அப்பா, மகன்: சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சி..!! (வீடியோ)
Next post கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்..!!