கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்..!!

Read Time:2 Minute, 6 Second

201709221328151620_black-circle-under-eyes-home-remedies_SECVPFகண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும்.

தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.

பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும்.

ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் கீழ் தொங்கும் சதை, கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக நேரம் தூங்கினால் உடலுறவில் நாட்டம் குறைந்துவிடுமாம்… தெரியுமா உங்களுக்கு?…!!
Next post அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா..!!