மெர்சல் படத்தை விளம்பரம் செய்ய தடை..!!

Read Time:2 Minute, 27 Second

201709221725370412_Mersal-film-advertising-banned_SECVPFவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார். இந்த தலைப்பை தற்போது விஜய் நடித்துள்ள படத்திற்கு ‘மெர்சல்’ தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தககுறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

இதற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அதிக பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால் விளம்பரப்படுத்த தடை விதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி: பார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு..!!
Next post விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’..!! (கட்டுரை)