மறக்க முடியாத “செப்டம்பர்-11”
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தது போல அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே தீவிரவாதிகள் நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது.
நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள்.
அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீப்பிளம்பை கக்கியது.
அப்போதுதான் இது தீவிர வாதிகள் செயல் என்று அமெரிக்கா கண்டு கொண்டது. அடுத்த நடவடிக்கைக்கு தயா ராவதற்குள் 9.43 மணிக்கு மற்றொரு விமானம் வாஷிங் டனில் உள்ள ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தை நொறுக்கியது.
அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை தகர்க்க வந்த இன்னொரு விமா னம் பயணிகள் எதிர்ப்பால் 10.10 மணிக்கு தரையில் மோதி சிதறியது. விமானங்கள் மோதியதால் உலக வர்த்தக மைய கோபுரங் கள் இரண்டும் தரைமட்டமாகி விழுந்தது. அதில் மட்டும் 2749 பேர் சிக்கி உயிர் இழந்தனர்.
பென்டகனில் ராணுவ அதிகாரிகள் உள்பட 184 பேர் பலியானார்கள். இன்னொரு விமானம் விழுந்ததில் 40 பேர் உயிர் இழந்தனர். அன்றைய தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டும் இறந்தவர்கள் எண் ணிக்கை 2973.
சினிமா கற்பனையையும் மிஞ்சும் வகையில் விமானத்தையே ஆயுதமாக மாற்றி அமெரிக்காவை சின்னா பின்னாமாக்கி வெற்றி எக்காளமிட்டனர் பின்லேடனின் அல் கொய்தா தீவிரவாதிகள்.
இதற்கு பழிவாங்க புறப்பட்ட அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக் என அடுத்தடுத்து போர் தொடுத்து வெற்றி பெற்றாலும் அல்கொய்தா தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்க முடியவில்லை.
அடுத்த தாக்குதல் என்றைக்கு? எந்த மாதிரி வரும் என்று தெரியாமல் “திக், திக்” பயத்திலேயே காலத்தை கடத்தி கொண்டிருக்கிறது அமெரிக்கா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...