யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்த பாகுபலி கூட்டணி..!!

Read Time:1 Minute, 30 Second

201709141613238140_Yuvan-shankar-raja-teams-up-with-Baahubali-dist_SECVPFதமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது பாடல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில் தற்போது பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் யு1 ரெக்கார்ட்ஸ் என்ற இசை நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களின் பாடல்களை தனது நிறுவனத்தின் மூலம் கைப்பற்றி வருகிறார். மேலும் சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் `கொலையுதிர் காலம்’ படத்தை பூஜா என்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், அடுத்த முயற்சியாக `பாகுபலி-2′ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய கே புரடொக்‌ஷன்ஸ் உடன் இணைந்து அடுத்த ஆண்டு வரை படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் அங்குள்ள சினிமாவை வளர்க்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுஜா காரியத்திற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வாள் – பிக்பாஸ்சில் இன்று..!! (வீடியோ)
Next post இணையத்தில் வெளியான செரினா வில்லியம்ஸின் வீடியோ..!!