வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டுமா…?..!!

Read Time:2 Minute, 36 Second

201709131338343152_elderly-Cough-cold-problem-immediate-solution_SECVPFகுளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள கசாயத்தை தினமும் அவர்களுக்கு கொடுத்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 200 மிலி.
பனைவெல்லம் பொடித்தது – 2 டீஸ்பூன்.
சுக்கு பொடித்தது – 1 டீஸ்பூன்
டீத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு பொடித்தது – 10 மிளகு
சித்தரத்தை பொடித்தது – 1 டீஸ்பூன்.

செய்முறை

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மேற்கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து 5 நிமிடம் நன்றாக சாறு இறங்க கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக வடிகட்டி பால் சேர்க்காமல் காலையில் எழுந்தவுடன் கொடுங்கள். இரவு தூங்குவதற்கு முன்னரும் கொடுங்கள். மிதமான சூட்டில் கொடுத்தால் அவர்கள் பருக ஏதுவாக இருக்கும்.

எந்தக்காரணம் கொண்டும் சர்க்கரை சேர்க்க வேண்டும். இருமல் அதிகரிக்க காரணம் இனிப்புகள் தான். பனைவெல்லம் நல்லது தான் செய்யும். சுக்குக்கு பதிலாக இஞ்சி விழுதாக அரைத்து சேர்க்கலாம். மிளகு அதிகமாக்கினால் காரம் அதிகமாகி விக்கலை கொடுக்கும். இதனால் அருகில் சுடு தண்ணீர் வைத்துவிடுவது மிக நல்லது.

அவர்கள் உறங்கும் அறையில் குண்டு பல்ப் அல்லது அனைத்து ஜன்னல்கள் மூடியவாறு இருத்தல் நலம். கத கதப்பு அவர்களுக்கு முக்கியம். திப்பிலி ரசாயணம் வாங்கி அதை காலை, இரவு வேளைகளில் தினமும் சுண்டைக்காய் அளவு உருட்டி சாப்பிட்டால் உடல் சூடேறி, சுவாச அடைப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? : ஸ்ரேயா ஆவேசம்..!!
Next post மீண்டும் விக்டருக்கு கைக்கொடுப்பாரா கௌதம் மேனன்..!!