பதின்பருவப் பிள்ளைகள் ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையானால் என்ன செய்வது..!!
இன்றைய உலகில் பதின்பருவப் பிள்ளைகள் எதையும் எளிதிலும் விரைவாகவும் அணுக முடிகிறது. அவர்கள் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ ஆபாசப் படங்களைப் பார்க்க நேரிட்டிருக்கலாம். பதின்பருவப் பிள்ளைகள் பாலியல் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருப்பது இயல்பானது தான், அது ஆரோக்கியமானதும் கூட. ஆனாலும் இன்றைய சூழ்நிலையோ வேறு. இணையத்தையும், ஆபாசப் படைப்புகளின் பிற வடிவங்களையும் எளிதாக அணுக முடிவதால், இன்றைய இளம்பிள்ளைகளுக்கு ஆபாசப் படைப்புகள் எளிதில் அறிமுகமாகின்றன.
ஆபாசப் படைப்புகளை நுகரும் பழக்கம் இளைஞர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உறுப்பாக அது அடிமைத்தனமாகிவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கலாம். புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கம், மதுப்பழக்கம் அல்லது போதைப் பொருள் பழக்கம் போன்ற எவற்றையும்விட ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாவது மிக எளிதாகும். அதற்கு முக்கியக் காரணம் இதில் நமது முக்கியமான, உணர்திறன் மிக்க புலனான கண்கள் சம்பந்தப்படுவதுதான்.
இவை கிடைப்பதும் மிக எளிது, இன்றளவில் தேவைக்கும் அதிகமான அளவில் இவை எங்கும் கிடைக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மற்ற பழக்கவழக்கங்களை விட இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் பார்க்கப்பட்ட படங்கள் இதில் பார்க்கப்படும் படங்கள், நமது நினைவில் நீண்ட காலம் இருக்கும், இவை மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம். இது உறவுகளையும் பாதிக்கும், உங்கள் இளம்பிள்ளைகள் இந்த அடிமைத்தனத்தின் போக்கில் தொடர்ந்து செல்வதற்காக அதிக பணத்தையும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
பெற்றோர்கள் தங்கள் இளம் பிள்ளைகள் ஆபாசப் படைப்புகளின் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்டுள்ளதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்பதை கவனமாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பதின் பருவத்தினர் ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாகி இருப்பதன் அடையாளங்கள் (Identifying Signs of Pornography Addiction in Teens)
மற்ற அடிமைத்தனங்களைப் போலவே ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாக இருப்பதும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையே வீணடித்துவிடலாம். அவர்கள் ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாகி இருப்பதைக் காட்டும் சில அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
தனக்கென்று தனிமை வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது திடீரென்று அதிகமாகும். அடிக்கடி அவர்கள் அறைக் கதவை மூடிக்கொண்டு இருப்பார்கள் அல்லது நீங்கள் அருகே வரும்போது கணினியில் திரைகளை மாற்றுவார்கள்.
பிறருடன் பழகும் நேரத்தை படிப்படியாகக் குறைத்துக்கொள்வார்கள், கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
நடந்துகொள்ளும் விதங்களிலும் மாற்றங்கள் தென்படலாம், திடீரென்று மனநிலை மாற்றங்கள் நேரலாம்.
உங்கள் இளம்பிள்ளை ஆபாசப் படங்களைப் பார்க்க அடிமையாகி இருந்தால், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பார்கள், இரவில் கற்பனைகளில் நேரம் செலவழிப்பார்கள் இதனால் அவர்களின் தூக்கத்திலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும்.
கல்வியிலும் படிப்படியாக தரம் குறையும். தூக்கப் பழக்கம் சரியாக இல்லாமல் போவதால், அது அவர்களின் படிப்பிலும் பிரதிபலிக்கும்.
அவர்கள் அதிக நேரம் இணையத்தில் அல்லது மொபைலில் செலவழிப்பார்கள், இவற்றை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுத்தால் அதிகமாக எரிச்சலடைவார்கள், பதட்டமடைவார்கள்.
ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் பதின்பருவத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் (Effect of porn on teens)
இது உங்கள் இளம்பிள்ளைகளை பல்வேறு வகைகளில் பாதிக்கிறது. உடலளவிலும் பாதிக்கிறது மனதளவிலும் பாதிக்கிறது:
ஆண்மை குறைவு, விரைவில் விந்து வெளியேறுதல் போன்ற பாலியல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பாலியல் உறவுகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு இது மிகவும் ஆரோக்கியமல்லாத வழியாகும். பாலியல் உணர்வுகளைப் பற்றியும் அன்னியோனியம் என்பதைப் பற்றியும் தவறான மனப்போக்குகள் அவர்களுக்குள் வளரக்கூடும். அவர்களுக்கு மூர்க்கமான, வக்கிரமான பாலியல் நடத்தைகள் உண்டாகலாம், இதனால் உணர்வுசார்ந்த, நடத்தை சார்ந்த பிரச்சனைகள் தோன்றலாம்.
ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாவதால் குற்ற உணர்ச்சி, மன இறுக்கம், தனிமை உணர்வு, உணர்வளவில் பற்றின்றி இருப்பது போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
கல்வியில் அவர்களின் தரத்தையும் பாதிக்கிறது, பல்வேறு அம்சங்களில் அவர்களின் வளர்ச்சி செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கும் வழிவகுக்கலாம்.
உடல் பற்றிய அபிப்ராயங்கள் பாலியல் ரீதியாக பாதுகாப்பற்ற தன்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகமாகும்.
மனநிலை மற்றும் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பது டோப்பமைன் எனும் ஹார்மோன். ஒருவர் மகிழ்ச்சியாக உணரும்போது டோப்பமைன் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆபாசப் படைப்புகளை அனுபவிக்கும்போது மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அதிகரிப்பதால் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் ஆபத்து அதிகம்.
குறைந்த கால அல்லது நீண்ட கால நினைவாற்றல் பிரச்சனைகளும் இதனால் ஏற்படலாம். அதுமட்டுமின்றி கவனம் செலுத்த இயலாமைப் பிரச்சனை, சாப்பிடுவது தொடர்பான பிரச்சனைகள் போன்ற உளவியல் பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
பெற்றோர் இவற்றைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள் (Tips for Parental Control)
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். எது சரி எது தவறு என்று சரியாக அடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு உதவ வேண்டியதும், அவர்களுடன் வெளிப்படையாக எல்லாவற்றைப் பற்றியும் பேச வேண்டியதும் பெற்றோர்களின் கடமை.
முதலில், உங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளில் நீங்களும் தினசரி ஈடுபட வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும், அவர்களின் நடத்தையில் ஏதேனும் வினோத மாற்றங்கள் தெரிகிறதா என்று உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அவர்களுக்கு முன் மாதிரியாக செயல்பட்டுக் காண்பிக்க வேண்டும். குடும்பம் முழுவதற்கும் இது குறித்த விதிகளை உருவாக்கி அனைவரும் பின்பற்றிப் பழக வேண்டும். தகாத இணையதளங்களை அவர்கள் அணுகுவதைத் தடுக்க தளங்களை வடிகட்டும் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். மொபைல், கணினி போன்றவற்றை தனிமையில் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
பிறர் இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டிருக்கும்போது, பிறரைப் பார்த்து இவர்களுக்கும் அது போன்ற உந்துதல்கள் வரக்கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி சரியான முடிவெடுக்க வேண்டும், எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
பாலியல், உறவுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். ஆபாசப் படைப்புகளைப் பார்ப்பது போன்றவற்றைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசுங்கள். அதனால் ஏற்படும் தீய விளைவுகள் என்னென்ன என்றும் பேசுங்கள். அவர்கள் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்று முத்திரை குத்துவதுபோல் நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது, அவர்கள் கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும், அவர்களின் கேள்விகளுக்கு நேர்மையான பதிலளிக்க வேண்டும்.
அவர்களுக்கு இந்தப் பழக்கம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்களைப் பற்றி கடுமையாக விமர்சிக்க வேண்டாம். பிரச்சனையின் தீவிரம் எவ்வளவு என்பதைப் பொறுத்து, ஆதரவுக் குழுக்கள், குடும்ப சிகிச்சை, தனிப்பட்ட சிகிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையாவது என்பது பிற போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைப் போன்றே கெடுதலானது. இதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டுமானால் அவர்களுக்கு நீங்கள் துணைநிற்க வேண்டியது அவசியம். நீங்கள் அவர்களைப் பற்றி தவறாக நினைத்துக்கொள்ளவில்லை, அவர்கள் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட உதவவே அவர்களுடன் துணைநிற்கிறீர்கள் என்று அவர்கள் உணர வேண்டும். அதன்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்!
Average Rating