டுவிட்டரில் வறுபடும், கோஹ்லியின் இங்கிலாந்து காதலி! அப்ப அனுஷ்கா சர்மா..!!

Read Time:3 Minute, 7 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் இங்கிலாந்து காதலி, கோலியின் பெயரை தவறாக எழுதியதால், டுவிட்டரில் வறுத்தெடுக்கப்படுகிறார்.என்னது, கோஹ்லியின் இங்கிலாந்து காதலியா, அப்ப அனுஷ்கா சர்மா….. சரி, சரி உங்களுடைய வேகம் புரிகிறது.

தொடர்ந்து படியுங்க. சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில், கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, பைனல் வரை சென்று அபாரமாக விளையாடயது. அதற்காக மிதாலி அண்ட் கோ தொடர்ந்து பாராட்டப்படுகின்றனர்.அந்த பைனலில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வீராங்கனை டேனியலி வியாட், டுவிட்டரில் சமீபத்தில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.

விராட் கோஹ்லி பரிசாக அளித்த இந்த பேட்டை இதுவரை பயன்படுத்தவில்லை. இனியும் காத்திருக்க முடியாது’ என்று வியாட் கூறியுள்ளார்.

விராட், வியாட் – ஆகா நல்ல பெயர் பொருத்தம்..அதில் பேட்டியின் அடிப்பகுதியில், விராட் கோஹ்லியின் பெயரை எழுதியிருந்தார். அதில், கோஹ்லியின் பெயர் தவறாக இருந்தது. சும்மா இருப்பார்களா, கோஹ்லியின் ரசிகர்கள். பொங்கியெழு மனோகரா ரேஞ்சில், சரமாரியாக அந்த டுவிட்டுக்கு பதில் அளித்தனர்.

2014ல் நடந்த ஐசிசி உலகக் கோப்பை டி-20 போட்டியின் போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 72 ரன்கள் அடித்தார் கோஹ்லி. அந்த அதிரடிக்கு பயன்படுத்திய பேட்டை, வியாட்டுக்கு பரிசாக அளித்திருந்தார். அதுதான் இந்த பேட்.

சரி, பேட் பரிசாக அளித்தார். எப்படி காதலியானார் என்று கேட்கிறீர்களா? அப்பா, உங்களுக்கு உலக ஞானம் தெரிந்து கொள்ளும் சுரப்பி கொஞ்சம் அதிகமாகத்தான் வேலை பார்க்கிறது.

அந்த 2014 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றபிறகு, டுவிட்டரில், கோஹ்லிக்கு வாழ்த்து கூறிய, தற்போது, 26 வயதாகும் வியாட், `என்னை திருமணம் செஞ்சுக்கோ’ என்று தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால், கோஹ்லி அதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. அப்பாடா, ஒருவழியாக, இந்த செய்தியை முழுமையாக படிக்க வைச்சாச்சு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுஜா,சினேகனுக்கு இடையில் வெடிக்கும் புதிய பிரச்சினை? யார் இறுதியில் வெற்றி பெற்றவர்?..!! (வீடியோ)
Next post உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணம்..!!