உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணம்..!!
முதுகு, கால் மூட்டு, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும். மூட்டு வலி, கழுத்து வலிக்கு தைலம், முதுகு வலி, தலை வலிக்கு மாத்திரை என நாமாகவே ஒரு யூகத்தில் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், வலிக்கான காரணம் குறித்து, என்றுமே சிந்தித்ததில்லை. வலி என்பது, உடலில் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கோளாறைக் குறிக்கும் அறிகுறி தான்.
உடலின் அடிப்படை கட்டமைப்பு, அதன் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொண்டால், தோள், முழங்கை, மணிக்கட்டு, மூட்டு, இடுப்பு, கணுக்கால், பாதம், தலை, முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலிகளுக்கு, தீர்வு காணலாம். இயங்கா நிலையில் வாழ்வது முழுமையான வாழ்க்கையல்ல. வலியை உணராமல் இருக்க மட்டும் தீர்வு காணும் நாம், நம் உடல் கட்டமைப்பில், மாற்றம் ஏற்பட்டால், அதைக் கண்டு கொள்வதில்லை. அதை சரி செய்தால் மட்டுமே, வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உதாரணமாக, முதுகு வலி ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடுவது, இடுப்புப் பட்டை போட்டுக் கொள்வது, பாதிப் படைந்த முதுகுக்கு ஏற்ப, மெத்தை அமைத்துக் கொள்வது, முதுகை சாய்க்க, நாற்காலியை பிரத்தியேகமாக வடிவமைப்பது என, எல்லாவற்றையும் செய்து கொள்கிறோம். ஆனால், இவை எதுவும் தீர்வாக அமையாது. முழு ஈடுபாட்டுடன், முயற்சி செய்து மீள்வது ஒன்றே தீர்வு.
வலி ஏற்பட்டால், உடல் பலம் குறைந்து விட்டதென்றோ, வாழ்வதற்குத் தேவையான திறனை இழந்து விட்டதாகவோ கருத முடியாது. உடல் அசைவு இல்லாததால் ஏற்படும் கோளாறுக்கான அறிகுறி தான், வலி என்பதை உணர வேண்டும்.
உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டால், அந்த பகுதியில் தான் பிரச்சினை என்று கருதக் கூடாது. உதாரணமாக, உங்கள் கழுத்திலோ, மூட்டிலோ வலி இருந்தால், குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதுவது தவறு. இடுப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்; எனவே, இடுப்புப் பகுதியில் உள்ள பாதிப்பை சரி செய்தால், கழுத்திலோ, மூட்டிலோ ஏற்பட்டுள்ள, வலியை சரி செய்யலாம்.
மேலும், வலி ஏற்படுவது, கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தானே தவிர, தற்போதைய உடல் நிலையால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முதுகு, மூட்டு, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என, எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே முழுதீர்வு கிடைக்கும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating