துருக்கி எல்லையில் விக்ரம் படக்குழுவினருக்கு சிக்கல்…!!
துருக்கி எல்லையில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், துருக்கி எல்லையில் அதிகாரிகள் சிலர் படக்குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. இது தொடர்பாக கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கியுள்ளனர். 24 மணி நேரங்களுக்கு மேலாக சாலையில் நிற்கின்றனர். படக்குழுவிடம் சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தும் படப்பிடிப்பு சாதனங்களுடன் குழுவை உள்ளே விட அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர்.
படக்குழுவினர் ஜார்ஜியாவிலிருந்து சாலை மார்க்கமாக இஸ்தான்புல் செல்கின்றனர். கேமரா, மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஆடைகளுடன் சென்றனர். இப்போது எல்லையில் அனுமதி கிடைக்காமல் சிக்கியுள்ளனர். அதிகாரிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
உங்கள் அழகான நாட்டில் ஒரு படம் எடுப்பதை நாங்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம் இதை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுகூர்ந்து உதவவும். என் படக்குழு குறித்து கவலையடைந்துள்ளேன்.
இவ்வாறு கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating