`இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்..!!
சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு புதிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.
புதுவை அரசின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக நடிகர் மாதவன் நடித்த `இறுதிச்சுற்று’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மற்றும் இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடக்கிறது.
புதுவை அரசின் செய்தி விளம்பர துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்தும் திரைப் பட விழா இன்று தொடங்கி 12-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
திரைப்பட விழாவை முதல்-அமைச்சர் நாராயண சாமி தொடங்கி வைத்து `இறுதிச்சுற்று’ திரைப்பட இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வழங்குகிறார்.
விழாவில் முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. செய்தி விளம்பர துறை செயலாளர் பார்த்திபன், நவதர்ஷன் திரைப்பட கழக செயலாளர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் லலித் வர்மா ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
விழாவை தொடர்ந்து `இறுதிச்சுற்று’ திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் இலவசமாக பொதுமக்கள் பார்க்க திரைப்படம் திரையிடப்படுகிறது.
நாளை (சனிக்கிழமை) சித்ரோகர் பெங்காலி திரைப்படமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காடு பூக்குன்ன நேரம் மலையாள படமும், 11-ந் தேதி ஏர்லிப்ட் இந்தி படமும், 12-ந் தேதி யூ-டர்ன் கன்னட திரைப்படமும் திரையிடப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating