அய்யோ என் பொண்டாட்டி… என் பொண்டாட்டி….. அதிர்ச்சியில் வையாபுரியை புலம்ப விட்ட பிக்பாஸ்..!! (வீடியோ)

Read Time:4 Minute, 57 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90மக்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியான பிக்பாஸ் 70 நாட்களை கடந்துவிட்டது. நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை பிக்பாஸுக்கு இருந்த வரவேற்பு சமீபமாகக் குறைந்திருந்தது.

அதை ஈடுகட்ட பல முயற்சிகளை எடுத்து வருகிறது தொலைக்காட்சி நிறுவனம். ஆள் குறையக் குறைய வெளியேறிய போட்டியாளர்களை எல்லாம் மீண்டும் விருந்தினர்களாக உள்ளே அழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழைந்த முதல்நாள் முதலே அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமையல் போட்டியில் தொடங்கிய டாஸ்க் விளையாட்டுகள் சில நேரங்களில் எல்லை மீறிப் போனது.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கினால் பல பிரச்னைகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஜூலிக்கு சேவகம் செய்ய ஓவியாவை நியமிக்க அவர் Mat-ஐ இழுத்து ஜூலியைக் கீழே விழ வைத்தார். அந்த விவகாரம் பூதாகரமானது.

பிக்பாஸ் டாஸ்க்கிற்கும் வையாபுரிக்கும் ஏகப் பொருத்தம். டான்ஸ் முதல், சைக்ளிங் வரை பல டாஸ்க்குகளை முதலில் எதிர்த்தவர் வையாபுரிதான். 48 வயதில் இந்த டாஸ்க்குகளை எல்லாம் என்னால் செய்யமுடியாது என பிக்பாஸிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறார் வையாபுரி. ஆனாலும், அவரும் மற்ற போட்டியாளர்களோடு அவர் செய்யமுடிந்த வகையிலான டாஸ்க்குகளை இதுவரை செய்துவந்தே இருக்கிறார்.

கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து வருகிறார். டாஸ்க்கை மீறுபவர்களுக்கு விளையாட்டுத்தனமான அதே நேரத்தில் கடுமையான தண்டனையும் உண்டு.

பிக்பாஸ் வழக்கப்படி இப்போது freeze (அப்படியே உறைந்து நிற்கும்) விளையாட்டு நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் யாரை freeze எனச் சொல்கிறாரோ அவர் அப்போது எந்த நிலையில் இருக்கிறாரோ அப்படியே அசையாமல் உறைந்துவிட வேண்டும். மீண்டும் ‘release’ சொல்லும்வரை அப்படியே இருக்க வேண்டும். இந்த ஆட்டம் நல்லா இருக்கே என பார்வையாளர்களும் ரசித்து வருகிறார்கள்.

இன்றைய பிக்பாஸிலும் இந்த ஆட்டமே நடைபெறுவது ப்ரொமோ வீடியோக்களின் மூலம் உறுதியாகி இருக்கிறது. இன்றைய வீடியோவில் பெண் ஒருவர் வையாபுரியைக் கூப்பிடுவதாகவும், வையாபுரி டாஸ்க்கை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பதுமாக வருகிறது.

வையாபுரி மனைவி….மிகச்சரியாக வையாபுரி freeze டாஸ்க்கில் இருக்கும்போது வையாபுரியின் மனைவியை பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே அனுப்புகிறார் பிக்பாஸ். அவர் வையாபுரியிடம் வந்து, ‘இவ்ளோ நாள் கழிச்சு வந்த என்னைப் பார்க்காம உங்களுக்கு என்ன டாஸ்க்’ எனக் கேட்கிறார்.

கையறு நிலை….70 நாட்களுக்கும் மேலாகப் பார்க்காத மனைவி வந்தும் கூட, அவரிடம் பேசமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார் வையாபுரி. அவரது மனைவி இவர் பேசாததைப் பார்த்துவிட்டு பிக்பாஸ் சொன்னபடி வீட்டை விட்டுக் கிளம்பப் போகிறார்.கூலுக்கும் ஆசை….

மீசைக்கும் ஆசை….
கடைசி நிமிடத்தில், பேச முடியாமல் வையாபுரி ‘பொண்டாட்டி என் பொண்டாட்டி…’ என ஒலி எழுப்புகிறார். பிக் பாஸ் டாஸ்க்கும் முக்கியம். மனைவியும் முக்கியம் பாவம் மனுஷன் எதைத்தான் பண்ணுவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி : தான்யா..!!
Next post ‘நெருப்புடா’ படப்பிடிப்பின் போது தீயில் இருந்து தப்பினேன்: விக்ரம் பிரபு..!!