`அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்தது குறித்து மனம் திறந்த பியா பாஜ்பாய்..!!
எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில்,
”இந்த படமும், இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டும் என்று இருந்தது. அதற்கேற்ப நானும் உடனே அதை செய்தேன். கதையின் அழகுக்கு தேவையும் அது. மேலும், தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகர் பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான்.
இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அருமையானது. கதாநாயகன் டோவினோ தோமஸுடன் இது எனக்கு முதல் படம். அபாரமான நடிப்பு திறமையை கொண்டவர் அவர். அவரது தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.
எங்கள் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது டீசரை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவியின் ஆதரவு எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த டீசரும் ரசிகர்களை ஆதரவை பெற்றுள்ளது.
வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ள ‘அபியும் அணுவும்’ படத்தை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’ நிச்சயம் சேரும் என நம்பியோடு உள்ளேன்”.
இவ்வாறு கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating