கன்னத்தில் உருவாக்கலாம் கவர்ச்சிக் குழி..!!

Read Time:4 Minute, 0 Second

201709041127562506_Dimple-Cheeks_SECVPFபெண்கள் அழகில் பளிச்சென்று திகழவேண்டும் என்றால் அவர் களது கன்னங்கள் மொழுமொழுப்பாக ஜொலிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள், இப்போது கன்னங்களில் கூடுதலாக இன்னொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அது கன்னக்குழி. கன்னத்தில் குழிவிழுந்தால் அது கவர்ச்சியை அதிகரிக்கிறது என் கிறார்கள்.

உண்மையில் பெண்கள் சிரிக்கும்போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகுதான்! ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும், இந்திய நடிகை பிரீத்தி ஜிந்தாவும் மட்டும் அதற்கு எடுத்துக்காட்டு அல்ல! பக்கத்து தெருவில் வசிக்கும் பெண்களும் கன்னத்தில் குழி விழுந்தால் அழகாகத்தான் இருக்கிறார்கள்.

அந்த அழகை பார்த்து ரசிக்கும் ஆண்களில் பலர், ‘சில பெண்களை மட்டும் இறைவன் நிதானமாக ரசித்து படைத்திருக்கிறான். அவர்களது கன்னங்களில் மட்டும் குழி விழுகிறது’ என்பார்கள்.

இனி அப்படி சொல்ல முடியாது. செயற்கையாகவே டாக்டர்களால் கன்னத்தில் அழகுக்குழி அமைக்கப்படுகிறது. இயற்கையான கன்னக் குழிகளில் இருவகை இருக்கிறது. முதல் வகையினருக்கு பேசும் போதும், சிரிக்கும்போதும் மட்டுமே குழி வெளிப்படும். இரண்டாவது வகையினருக்கு எப்போதும் பளிச்சென அந்த குழி தெரியும். பொதுவாக பெண்களுக்கு இயற்கையாக கன்னத்திலும், தாடையிலும் குழி விழுவதுண்டு.

கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?

கன்னங்களின் தசைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் குழிவிழுவதற்கான காரணம். முகத்தில் ‘ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர்’ என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடிமனாலோ, தொடர் தசையில் ஏற்படும் பிளவாலோ குழி உருவாகிறது. முகத்தில் சேரும் கொழுப்பும் கன்னக் குழிக்கு காரணமாகிறது. ஆனால் கொழுப்பு குறையும்போது அது மறைந்துவிடும். இளமையில் குழி அழகோடு தோன்றினாலும் வயதாகும்போது அது காணாமல் போவதன் மாயம் இதுதான்.

இயற்கையாக குழி இல்லாதவர்கள், செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம். இது நவீன அழகு சிகிச்சையாகும். லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் குழியை உருவாக்கிவிடுகிறார் கள்.

முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில்கொண்டு குழியை உருவாக்குகிறார்கள்.

ஆபரேஷன் முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி, பின்பு சிரிக்கும்போதும், பேசும்போதும் மட்டும் தெரியும்.

சரி.. செயற்கை குழி அழகாக இல்லாவிட்டால், குழியை மூடிவிடலாமா? அதற்கு எளிதான இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுத்தர வயது ஆண்கள் பாலியல் வாழ்க்கை..!!
Next post நண்பனுடன் உறவுகொண்ட தாயார்: பொலிசாரிடம் புகார் அளித்த மகள்..!!