ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்..!!

Read Time:1 Minute, 35 Second

201709031323287952_Madhavan-away-from-the-Aishwarya-Rai-film_SECVPF‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பேன்னி கான்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணம் அப்படத்தில் நடிக்க முடிய வில்லை. இதுபற்றி கூறியுள்ள அவர், ‘பேனிகான்’ படத்தின் கதை பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யாராய் ஜோடியாக ராஜ்குமார்ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் நோய் எதிர்ப்பு சக்தி பறிபோகும்: விஞ்ஞானி தகவல்..!!
Next post ‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது?..!! (கட்டுரை)