விஜய் ஆண்டனிக்கு கைக்கொடுக்கும் சிரஞ்சீவி..!!

Read Time:1 Minute, 29 Second

201709031529459404_Chiranjeevi-to-release-the-FL-of-vijayantonys-Indrasena-on_SECVPFஇசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’, ‘எமன்’ படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘அண்ணாதுரை’ படம் உருவாகி வருகிறது.

இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார். இப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்..!!
Next post செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் நோய் எதிர்ப்பு சக்தி பறிபோகும்: விஞ்ஞானி தகவல்..!!