1000 லிங்கங்களுக்கு அபிசேகம் செய்யும் இயற்கையின் அதிசயம்..!! (வீடியோ)
1000 சிவலிங்கங்களுக்கு இயற்கையே அபிசேகம் செய்யும் அற்புதக் காட்சி கர்நாடக மாநிலத்தின் பகுதியில் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றில் உள்ளது.
இயற்கையே 1000 சிவலிங்கங்களுக்கு நீர் அபிஷேகம் செய்யும் அதிசயம் நடக்கின்றது.
பொதுவாக, தானாக தோன்றும் சிவலிங்கங்களை இந்துக்கள் சுயம்பு லிங்கம் என்று கூறுவார்கள்.
ஆனால் ஒரே இடத்தில் காணப்படும் 1000 லிங்கங்களும் தானாகவே தோன்றி உள்ளனவா? அல்லது யாரேனும் உருவாக்கினார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு ஒரே இடத்தில் 1000 சிவலிங்கங்கள் காணப்படும் காட்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரோட்டம் உள்ள பகுதிகளில் தான் இந்த லிங்கங்கள் அனைத்தும் உள்ளன.
ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுப்பதாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றிலேயே இந்த 1000 லிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆறு சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குறித்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என அழைக்கப்படும்.
இதனுடன் ராமர், லட்சுமி, பிரம்மன் போன்ற சுவாமி சிலைகளும் உள்ளன.
சிவலிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
அந்த சந்தர்ப்பத்தில் இந்த லிங்கங்களுக்கு எந்த நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம் தான். இதுவே சிறப்பம்சமாகும்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இந்த இடத்திற்கு செல்வது ஒருவித மன அமைதியை கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பது இது வரையும் அறிய முடியாதுள்ளது.
இருப்பினும், யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் இந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating