ஹன்சிகாவின் இடத்தை பிடித்த கேத்தரின் தெரசா..!!

Read Time:1 Minute, 46 Second

201708300904540513_Catherine-Tresa--occupies-Hansikas-place_SECVPFஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட `தனி ஒருவன்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வசூலைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி – அரவிந்த் சாமி – ஹன்சிகா நடிப்பில் அடுத்ததாக வெளியான ‘போகன்’ படமும் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது.

தமிழில் இந்த படத்தை இயக்கிய லஷ்மண் தெலுங்கு பதிப்பையும் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி இடம்பெறவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே `தனிஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான `துருவா’ படத்தில் அரவிந்த்சாமியே நடித்திருந்தார். அரவிந்த் சாமி கதாபாத்திரம் மற்றும் மற்ற கதாபாத்திரங்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப போகன் படத்தின் இரண்டாவது பாதியில் சில மாற்றங்களை கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..!!
Next post வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?..!! (கட்டுரை)