உடல் உழைப்பு இல்லாததால் பெண்கள் 30 வயதில் சந்திக்கும் பிரச்சனைகள்..!!

Read Time:5 Minute, 29 Second

201708281129015457_women-face-problem-at-the-age-of-30_SECVPFபருவம் அடைதல், திருமணம், குழந்தைபேறு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அதிகமான உதிரப் போக்கு, சுழற்சி தவறிய மாதவிடாய், திருமணத்திற்கு பின் ஏற்படும் தொடர்ச்சியான கருச்சிதைவு, குழந்தையின்மை, குழந்தைபேற்றுக்குப்பின் வரும் உடல் மாற்றம், அதிகப்படியான உடல் பருமன், மன அழுத்தம், நாற்பது வயதைத் தாண்டி வரும் இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்சனை அதைத்தொடர்ந்து வரும் கர்ப்பப்பை பிரச்சனை, முதுகு வலி, முழங்கால் வலி என அனைத்திற்கும் யோகாவில் தீர்வு உண்டு.

மின் இயந்திரங்களின் வருகைக்கு முன்பு, பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்ததால், துணி துவைப்பது, அம்மி ஆட்டுக்கல் கொண்டு உடலை அசைத்து வேலை செய்வது, கீழே அமர்ந்து காய்கறிகளை அரிவது என பல வேலைகளை செய்து வந்தனர். இவை அனைத்திலும் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் படித்து, அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் சூழலில், வீட்டு வேலைகளில் பெரும்பாலும், உடல் உழைப்பு குறைந்து மின் இயந்திரங்களின் ஆதிக்கம் பெருகிவிட்டதால் உடல் அசைவுக்கென சில உடற்பயிற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன.

பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகும். அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குக் கூட ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்.

இதனால் முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அதிக உடல் எடை, முகச் சுருக்கம், முகப்பரு, வயது மூப்புத் தோற்றம் போன்றவையும் வருகிறது. 80% பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தினம் ஒரு முறையாவது கீழே உட்கார்ந்து எழ வேண்டும். மேலும் இன்டியன் டாய்லெட் பொஸிஸன் பயன்படுத்த வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுப்பெறும்.

நமது உணவு முறைகளும் இயற்கையானதாக இருத்தல் வேண்டும். உணவில் பச்சை நிற காய்கறி, பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பப்பையினை மாதாமாதம் சுத்தப்படுத்துவதே மாதவிடாய். 35 நாட்களுக்கு மேல் பீரியட்ஸ் வரவில்லை என்றால் கர்ப்பப்பை பிரச்சனை. மாதவிடாய் பிரச்சனையில் துவங்கும் இது குழந்தையின்மை பிரச்சனைவரை கொண்டு செல்லும்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக்க வழி உள்ளது. இதயம், வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றை வேலை செய்ய வைத்து சுத்தப்படுத்த அதற்கென சில யோகா பயிற்சிகள் உள்ளன. ஜிம்முக்கு போய் உடலை சரிபண்ணினால் வெளித்தோற்றம் மட்டும்தான் மாறும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உடல் இரண்டு மடங்கு எடைபோடும். ஜிம்மில் உடலின் உள்உறுப்புகள் வேலைசெய்யாது.

யோகா உள் உறுப்புடன் தொடர்புடையது. நம் உடல் எடை மெதுவாகக் குறையும். ஆனால் மறுபடி ஏறாது. தினம் ஒரு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செய்தால் போதும். இதனால் பெண்களுக்கு ஹார்மோன்கள் மூலம் வரும் சிக்கல்கள் சரியாகும். பீரியட்ஸ், குழந்தையின்மை, மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தத்தில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறலாம். யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் முக அழகைக் கூட்டி, இளமையை தக்க வைக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலை நேரத்தில் உடலுறவு கொண்டால் என்னவாகும் தெரியுமா?…..!!
Next post திருட்டுப்பயலே 2 பாடல்கள் வெளியிடும் தேதி அறிவிப்பு..!!