அசிங்கமாக இருந்தால் இந்த நாட்டில் ஆசிரியர் பணி இல்லை..!!
வசீகர தோற்றத்துடன் இல்லாமல், முகப்பரு, மச்சம், தோல் நோய் இருந்தால் ஆசிரியர் பணி கிடைக்காது என ஈரான் அரசு அறிவித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டின் கல்வித்துறை நூற்றுக்கணக்கான நோய்கள் மற்றும் நிலைமைகளை விவரிக்கும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ‘மலட்டுத்தன்மை, பித்தப்பையில் கல், தொற்றுநோய், புற்றுநோய் உள்ள பெண்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணி இல்லை
பார்வை கோளாறு, மாறுகண் இருந்தால் ஓவிய ஆசிரியராகப் பணியாற்ற முடியாது. 20 பற்களுக்கு குறைவாக இருப்பவர்களுக்கும் முகத்தில் மரு, மச்சம், முடி உள்ளவர்களுக்கும் ஆசிரியர் பணி கிடையாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் ஆசிரியராக பணியாற்ற அனுமதியுள்ளது. ஆனால், அவர்கள் தங்களது தலைமுடியை ஸ்கார்ப்பால் மூடிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.இந்த நிலையில், இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், ‘ஆசிரியரின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதற்காக கட்டுபாடுகள் விதிக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு தெளிவான மனித உரிமை மீறல். இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் ஈரானில் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளனர்.ஆனால் தற்போதைய உத்தரவு குறித்து விசாரிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானியின் ஆலோசகர் மொலாவர்டி தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating