‘அபியும் அனுவும்’ ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதை : இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி.!!
சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘அபியும் அனுவும்’ இப்பட்டியலில் சேர முனைப்போடுள்ளது.
இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார். ‘அபியும் அனுவும்’ படத்தை குறித்து அதன் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி பேசுகையில், ”இது ஒரு புதுமையான, இதுவரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகும் பொழுது ரசிகர்கள் அறிவார்கள்.
மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின்னணி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. ரிலீசுக்கான தகுந்த தேதியை முடிவு செய்யவுள்ளோம்.”
இப்படத்தை ‘ச ரி க ம இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் சினிமா பேனரான யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தரனின் இசையில், அகிலனின் ஒளிப்பதிவில், உதயபானு மகேஸ்வரனின் கதை மற்றும் திரைக்கதையில், சுனில் ஸ்ரீ நாயரின் படத்தொகுப்பு மற்றும் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் ‘அபியும் அனுவும்’ உருவாகியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating