இருதயத்தினை பாதுகாக்க எளிதான வழிகள்..!!

Read Time:2 Minute, 49 Second

201708240842080126_Easy-ways-to-protect-your-heart_SECVPF* வருடாந்திர மருத்துவ பரிசோதனை நீங்கள் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதனை காட்டி விடும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதனை உணருங்கள். உங்கள் இரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு கொலஸ்டிரால் அளவு இவற்றினை உங்கள் பிறந்த நாள் வரும் பொழுது செக்கப் செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நீங்களே தந்து கொள்ளும் பரிசு.

* உப்பின் அளவினை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலைகளை உடற்பயிற்சி போல் ஆகட்டும். கைவீசி நடங்கள். படிகட்டு ஏறி இறங்குங்கள். டி.வி. பார்க்கும் பொழுது 15 நிமிடம் ஜாக் செய்யுங்கள்.

* வீடு பெருக்கி துடையுங்கள்.

* ஜன்னல் கதவுகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

* குழந்தைகளை பார்க்கிற்கு கூட்டி சென்று விளையாடுங்கள்.

* இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடங்கள்.

* யோகா அல்லது ஸ்ட்ரெட்ச் பயிற்சி செய்யுங்கள்.

* ரிமோட் உபயோகிப்பதை நிறுத்தி எழுந்து நடங்கள்.

* எங்கு சென்றாலும் கையில் ஒரு குடிநீர் பாட்டிலுடன் செல்லுங்கள். அவ்வப்போது சிறிது தண்ணீர் குடியுங்கள்.

* நொறுக்கு தீனி வீட்டில் இருக்கவே வேண்டாம். காய்கறிகளும், பழங்களும் கண்ணெதிரே இருக்கட்டும்.

* கொழுப்பு இல்லாத உணவினை பழக்கத்தில் கொண்டு வாருங்கள்.

* எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி, டீ போன்றவற்றினை பொறுமையாக அருந்துங்கள்.

* மற்றவர்களுடன் அமர்ந்து உண்ணுங்கள். தனியாக உண்டால் நாம் அதிகமாக உட்கொள்வோம்.

* சிகரெட் பிடிப்பதனை உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் விட்டு விடுங்கள்.

* உங்களுக்கு சரியான எடை எது என்பதனை அறிந்து அதனை கடைபிடியுங்கள்.

* ஆக்கப்பூர்வமாகவே இருங்கள்.

* உங்களின் இந்த சாதனைகளை நீங்களே மனதினுள் பாராட்டி மகிழுங்கள்.

* உங்கள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உங்கள் மனம் போனபடி மாற்றாதீர்கள். இதனால் ஆபத்து பாதிப்பு உடையவருக்கே.

* உடல் சொல்லும் சின்ன அறிகுறிகளை ஒதுக்காதீர்கள். உங்கள் இதயம் ஆரோக்கியமாகவே இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கமலோடு இணைகிறேனா? – கவுதமி விளக்கம்..!!
Next post சீனா குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வினோத வழி..!!