ஹாலிவுட் சண்டை இயக்குனரை அசர வைத்த அஜித்..!!
சினிமா உலகில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ‘விவேகம்’. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உலகமெங்கும் நாளை ரிலீஸாகவுள்ளது. அஜித்துடன் சேர்ந்து ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ படத்தை பற்றி மிகுந்த நம்பிக்கையோடும் துள்ளலோடும் உள்ளார்.
‘விவேகம்’ குறித்து இயக்குனர் சிவா பேசுகையில், ”தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு திரில்லர் ‘விவேகம்’. கிராமப்புற பின்னணியில் ‘வீரம்’, நகர பின்னணியில் ‘வேதாளம்’, இப்படங்களுக்குப் பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் தான் கொடுத்தார். இந்த கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம். ‘விவேகம்’ படத்தில் ஆக்ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் உள்ளன.
பல்கெரியா, சைபீரியா, க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம். அஜித் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு படையலாக இருக்கும். சண்டை காட்சிகளுக்கு ‘டூப்’ வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிற்பவர். இப்படத்தில் அஜித் செய்த ஒரு அசுர பைக் ஸ்டாண்டை பார்த்த அதனை இயக்கிய ஹாலிவுட் சண்டை இயக்குனர் காலோயன் வொடெனிசரோவ் [Kaloyan Vodenicharov] அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.
ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது. இந்த படத்துக்காக அஜித் ஜிம்மூக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார். அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’ வை மையமாக வைத்தே இப்படத்தில் ‘Never ever give up’ என்ற வசனத்தை எழுதினோம். உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு ஏதுவாலும் தர முடியாது. எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போட்டுள்ளது. அதனால் இப்படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு ஆச்சிரியம் இல்லை. ஆகஸ்ட் 24 ஆம் தேதியை குதூகலத்தோடு எதிர் நோக்கியுள்ளோம். இது ஒரு கோலாகல பண்டிகை வாரமாக இருக்கும் என நம்புகிறோம்”.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating