குழந்தை வரம் கொடுக்கும் பூசாரி… எப்படின்னு தெரியுமா?..!!

Read Time:2 Minute, 37 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு, இன்ன வருடம், இன்ன தேதியில், இன்ன குழந்தை பிறக்கும் என்று சொல்லி அசத்தி வருகிறார் கலிதீர்த்தான் பூசாரி.குறிப்பாக, திருமணத் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிட்டவும் அருள்வாக்குச் சொல்கிறார் கலிதீர்த்தான். அவர் சொல்வது அப்படியே நடந்துவிடும் என்பதற்கு, காரியம் கைகூடியவர்கள் கோயில் வளாகத்தில் செய்து நிறுத்தியிருக்கும் ஏராளமான குழந்தை உருவ சிலைகளே சாட்சி.

குழந்தைப் பிறக்கும் நாளைக் குறிப்பிடும்போதே அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார் கலிதீர்த்தான்.

குழந்தைக்காக அருள்வாக்கு கேட்க வருவோரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை ஒரு செம்பில் கரகம் போல் வைத்து வணங்கிவரச் சொல்கிறார். வரம் கிடைத்ததும் அந்தச் செம்பையும் தேங்காயையும் எடுத்துவந்து பூசாரியிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிக் கொடுக்கப்பட்ட செம்புகள் கோயில் வளாகத்தில் மலைபோல குவிந்துள்ளன. இதேபோல், நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு நிற்பவர்களுக்கும், திருமண நாளை தீர்க்கமாகச் சொல்லி அனுப்புகிறார் கலிதீர்த்தான்.

அய்யனாரிடம் வேண்டுதல் வைக்கும்போதே எனக்கு இந்தக் காரியம் கைகூடினால், ‘ஒரு நாள் பூஜை வைத்து, இரவு நாடகம் வைக்கிறேன்’ என்று வேண்டிக் கொள்கிறார்கள்.

அதுபடியே, வேண்டுதல் பலித்ததும் நாடகம் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். இப்படி, ஆண்டுக்கு ஐம்பது நாடகங்களுக்குக் குறையாமல் இங்கு நடக்கிறது.இடம்: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 3-ல் இருக்கும் கலிதீர்த்த அய்யனார் கோயில் பூசாரியாக இருப்பவர் தான் இந்த கலிதீர்த்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடை வடிவமைப்பும்.. அழகிய பின்னணியும்..!!
Next post உலகின் முதல் அதிவேக புல்லட் ரயில்: மணிக்கு எவ்வளவு வேகம் தெரியுமா?..!! (வீடியோ)