நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 6 விஷயங்கள்! – நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..!!
இது ஒன்லி ஃபார் கெட்ட பசங்க. அதனால், நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நல்லவர்கள், கெட்டவர்கள் என நமது சமூகத்தில் இரு தரப்பினர் தான் இருக்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்தால். இல்லை என்பது தான் உண்மையான பதில். ஆம், 99% நல்லவன் – 1% கெட்டவன் என்பதில் துவங்கி; 99% கெட்டவன் -1% நல்லவன், என்பது வரை பல வகைகளாக மனிதர்கள் பிரிந்திருக்கிறார்கள்.
ஓர் மனிதன் செய்யும் பெரிய தவறு நம்ப வைத்து ஏமாற்றுவது. நம்பிக்கை துரோகம். அதிலும், உறவுகளில் தான் மனிதர்கள் நிறைய நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். பதின் வயதுகளில் இருந்து, இருபதுகளின் இறுதி வரை சிலர் ப்ளேபாய், ஃப்ளர்ட் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் கெட்டவர்களுக்கான கட்டுரை இது.
கெட்டவனா இருக்கிறதா முடிவு பண்ணிட்டா முழுசா நல்ல கெட்டவனா இருந்துட்டு போங்க. அதென்ன நல்ல கெட்டவன்னு கேட்கிறீங்களா?
சொல்லிடுங்க! எனக்கு லவ் எல்லாம் இல்ல, ஜஸ்ட் லைக் தட் தான் பழகுறேன். இத நெக்ஸ்ட் லெவலுக்கு எடுத்துட்டு போக ஐடியா இல்ல. நீயா கற்பனைய வளர்த்துக்காத… உனக்கு ஓகே-னா ஓகே… ஃப்ரெண்ட்ஸா இருந்திடலாம். இல்லனா ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்ன்னு வெளிப்படையா சொல்லிடுங்க. இதனால் அந்த பொண்ணுக்கு பெரிசா ஹர்ட் ஏதும் ஆகாது. அதவிட்டுட்டு பொய் சொல்லி, உண்மைய மறச்சு ஒருத்தங்கள ஏமாத்த கூடாது.
கனவு செடிக்கு நீரூற்றாதீர்கள்! திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. ஜாலிக்காக தான் பழகுறேன் என்ற எண்ணம் இருப்பவர்கள். தேவையில்லாமல், நாம் திருமணம் செய்துக் கொண்டால் எப்படி எல்லாம் வாழ்வோம், நமது வாழ்க்கை இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசை கனவுகளுக்கு உரம் போட்டு, நீரூற்றி வளர்க்க வேண்டாம். ஆண்களை காட்டிலும், பெண்களின் கனவுகளுக்கு வலு அதிகம். அது உடைவதால் ஏற்படும் வலியும் பெண்களுக்கு அதிகம்.
எதுக்கு? எப்படியும் ஒண்ணா வாழ போறதில்லன்னு கன்பார்ம் பண்ணிட்டிங்கன்னா, எனக்காக நீ இதெல்லாம் செய்யக் கூடாது, அதெல்லாம் பண்ணாத, ஃபாரின் போகாத, இந்த வேலை செய்யாத என அவர்களை தியாகம் செய்ய கூறாதீர்கள்.
ப்ளேபாய்! நீங்க நிஜமாவே ப்ளேபாய்னா அத அப்படியே மெயின்டெயின் பண்ணிட்டு போங்க பாஸ். நான் உத்தமன், என் லைப்ல வந்த முதல் பொண்ணு நீதான்… என்று நல்ல பெண்களையும் ஏமாற்ற வேண்டாம். கெட்டவர்களுடன் கெட்டவனாக இருப்பது பெரிய தவறல்ல. ஆனால், நல்லவர்களை கெடுப்பது தான் பெரும் தவறு.
விட்டுடுங்க! ஒருவேளை உங்களுக்குள் சண்டை வந்து அந்த பெண் பிரிந்து போய்விட்டார் என்றால் விட்டுவிடுங்கள். மேலும், உங்களை நல்லவனாக காண்பித்துக் கொள்கிறேன் என்ற பேர்வழியில் அவர்களிடம் நடித்து, அவரை மீண்டும் ஈர்க்கும் விஷயங்களில் போலியாக நடந்துக் கொள்ள வேண்டாம். இது மோசமான குணாதிசயங்களில், கடைக்கட்ட மோசமான செயல்.
முழுமையாக இல்லை எனில், எதற்கு? நீங்கள் ஒருபோதும் அவருக்காக முழுமனதுடன் நடந்துக் கொள்ள போவதில்லை எனில், அவரது வாழ்வில் எல்லா கட்டங்களிலும் நீங்களாக இன்வால்வ் ஆகவேண்டாம். உங்களால் அவருக்கு நேரம் ஒதுக்க முடியாது எனும் போது, அவரது நேரத்தை உங்களின் தேவைக்காக திருட வேண்டாம். சுலபமா சொல்லனும்னா… கலப்படமான நல்லவனா இருக்கிறதவிட, சுத்தமான கெட்டவனா இருந்திடுங்க!
Average Rating