இந்த கீரைகளில் எல்லாம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Time:3 Minute, 43 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள்.

தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கிய பலம் அதிகரிக்கிறது.

முளைக்கீரை

கலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. சோடியம், பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் ஓரளவு உள்ளது.

ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம், சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

வெந்தயக்கீரை

இரும்பு, நார்ச்சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் மிகுதியாக இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் நிறைய இருக்கிறது.

தாது உப்புக்களில் பொட்டாஷியம் குறைந்த அளவும், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஷ், துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவும் இருக்கின்றன.

சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தங்கள் உணவில் இந்தக் கீரையை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. எல்லோருக்கும் ஏற்ற வெந்தயக் கீரையை மசியல் செய்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை

கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது.

மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புக்களான பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம் மற்றும் குளோரைடு ஆகியவை ஓரளவு இருப்பதால், உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்புகள் உறுதி பெறும். கூட்டு செய்து சாப்பிட ஏற்றது.

பொன்னாங்கன்னி

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓரளவு உண்டு. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ஃப்ளோமின் நிறைந்தது.

மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், சல்பர் ஆகியவை ஓரளவு உண்டு. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் மற்றும் கலோரி ஓரளவு உண்டு. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.

பாலக்கீரை

கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிப்பதை தவிர்க்கும் ஓவியா..!! (வீடியோ)
Next post சூறாவளியாக பிக்பாஸ் இல்லத்தில் குதிக்கும் இவர் யார்..? அடுத்தடுத்து களமிறக்கப்படும் பிரபலங்கள்..!! (வீடியோ)