பெண்களின் கையை அலங்கரிக்கும் ஆடம்பர கைக்கடிகாரங்கள்..!!
ஆண்கள் தங்கள் கைகளில் அணிகின்ற கைக்கடிகாரங்கள் சாதாரணமானது முதல் ஆடம்பரமான விலை மதிப்புமிக்கது வரை நிறைய சந்தைக்கு வருகின்றன. கைக்கடிகாரம் அணியாத ஆண்மகனை வெளியில் காண்பதே அரிது. தற்போதைய கார்பரேட் கலாசாரத்தின் சாயலாய் விலை உயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரங்களின் மீதான தாக்கம் அதிகரித்து வருகின்றன.
இளைஞர்கள், அலுவலகம் செல்வோர், உயர் பதவி வல்லுநர்கள் என பலரும் ஆடம்பர கைக்கடிகாரங்கள் அணிவதில் ஆர்வமுடன் உள்ளனர். உலகளவில் ஆடம்பர கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கின்ற சிறப்பு கைக்கடிகார தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் நிறுவன பெயரே அந்த கைக்கடிகாரத்தின் சிறப்பையும், உயர் அந்தஸ்தையும் கூறிவிடும். ஏனென்றால் ஆடம்பர கைக்கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கு என வழங்கும் நற்மதிப்பு சான்றுகள், அவற்றின் மதிப்புமிக்க உலோக மற்றும் இயக்க மதிப்பீடுகள் போன்றவை அதிக ஈர்ப்பை தருகின்றன.
ஆடம்பர கைக்கடிகாரங்கள் என்பவை நாம் தினசரி அணிகின்ற கைக்கடிகாரங்கள் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டாலும் அதன் தயாரிப்பும், மூலப்பொருட்கள் இணைப்பும் அறியும்போது கண்கள் விரிவடைகின்றன.
வைரங்கள் பதியப்பட்ட ஆடம்பர கைக்கடிகாரங்கள்
ஆடம்பர கைக்கடிகாரங்களில் முதலிடம் பிடிப்பவை வைரங்கள் பதியப்பட்ட கைக்கடிகாரங்கள். சராசரி அளவை விட சற்று பெரிய வட்டத்துடன் காணப்படும் இக்கடிகாரங்களில் அற்புதமான கட்டிங் செய்யப்பட்ட வைரகற்கள் அனைத்து பகுதிகளிலும் பதியப்படுகின்றன. 100 முதல் 600 வரையிலான சிறு வைர கற்கள் பதிக்கப்படுகின்றன. தலைமை பகுதி, டையல் பகுதி, முட்களை நகர்த்த உதவும் பகுதி என அனைத்திலும் வரிசையாக வைர கற்கள் ஜொலிக்கின்றன. வைர கற்கள் வாட்ச்யின் பிரதான இயந்திர பகுதிகளுக்கு மட்டுமின்றி சில கைக்கடிகாரங்களின் ஸ்ட்ராப் பகுதிகள் முழுவதும் இடைவெளி விட்டு பதியப்படுகின்றன. குறைந்தது 2 கேரட் முதல் 11 கேரட் வரை இவற்றில் வைரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தங்கம் மற்றும் பிளாட்டின ஆடம்பர கைக்கடிகாரங்கள்
பெரும்பாலும் வெள்ளை உலோகம் பின்னணியில் தான் ஆடம்பர கடிகாரங்கள் அதிக கவர்ச்சியுடன் காணப்படுகின்றன. அதனால் பிளாட்டினம் மற்றும் வெள்ளி தங்கம் ரேடியம் பூசப்பட்டவாறு கைக்கடிகாரங்கள் செய்யப்படுகின்றன. ரோஸ் கோல்டு மற்றும் மஞ்சள் தங்கம் என்றவாறும் 18 கேரட் கொண்ட ஆடம்பர கைக்கடிகாரங்களும் உலா வருகின்றன. கைக்கடிகாரத்தின் உள் இயந்திர பகுதிகள் கூட இதே உலோகங்களால் தான் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வைரங்கள் பதியப்படாத முழு உலோக பின்னணி கொண்ட ஆடம்பர கைக்கடிகாரங்களும் வருகின்றன. அவையும் 18 கேரட் ரோஸ் கோல்டு, பிளாட்டினம், வெள்ளை தங்கம் என்றவாறு கடிகாரப் பகுதி மற்றும் பிரேலெட் என அனைத்தும் ஒரே உலோகம் மற்றும் இரட்டை உலோக சாயல் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.
இதில் சுழலக்கூடிய முட்கள் அழகிய கத்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த முட்கள் கூட விலை அதிகமான நீல மாணிக்க கல்லால் செதுக்கப்பட்டவை. ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அதி உன்னதனமான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கைதேர்ந்த வல்லுனர் குழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
நிலவின் நகர்வை காட்டும் கைக்கடிகாரங்கள்
ஆடம்பர கைக்கடிகாரங்களில் அதன் பட்டை பகுதியும் விலை மதிக்கத்தக்க உயர் ரக தோல் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் சில ஆடம்பர கைக்கடிகாரங்களில் முட்கள் பகுதியின் கீழ் சிறு வட்ட அமைப்பு தனித்தவாறு உள்ளன. அதில் மாலை 6 மணிக்கு மேல் நிலா எப்படி வானத்தில் எந்த பகுதியில் உள்ளது என்பது நகர்வுகளாக தெரிகின்றன. ஆடம்பர கைக்கடிகாரங்கள் சில காப்பு போன்று நகை சார் கைகடிகாரங்களாகவும் உள்ளன. இந்த வகை கைக்கடிகாரங்கள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆண்களை கவரும் ஆடம்பர கைக்கடிகாரங்கள் அனைத்தும் ஆர்வமூட்டும் வகையில் உள்ளன.
Average Rating