அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஷரபோவா- ஹெனின் பலப்பரீட்சை

Read Time:2 Minute, 36 Second

Tennis.jpgஇந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமேலி மவுரஸ்மோ(பிரான்சு), 3-ம் நிலை வீராங்கனையும் ரஷியா நாட்டைச் சேர்ந்தவருமான மரியா ஷரபோவாவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-0, 4-6, 6-0 என்ற செட்கணக்கில் மவுரஸ்மோவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின், ஜெலீனாஜன் கோவிக்(செர்பியா) மோதி னார்கள்.

இந்த ஆட்டத்தில் ஹெனின் 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், மார்ட் டின்டம்(செக்குடியரசு) ஜோடி, பால் ஹேன்லி(ஆஸ்திரேலியா), கெவின்(ஜிம்பாப்வே) ஜோடி யுடன் மோதியது.

இதில் பெயஸ் ஜோடி 6-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெயஸ் ஜோடி இறுதி போட்டியில் பிஜோர்க்மேன்(சுவீடன்), மேக்ஸ்மிரினி (பெல்லாரஸ்) ஜோடியுடன் மோதுகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் `சாம்பியன்’ பட்டம் வெல்வதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 2-ம் நிலை வீராங் கனையான ஜஸ்டின் ஹெனின்-ஷரபோவா பலப் பரீட்சை நடத்துகின்றனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) நிக்கோலேவுடன் (ரஷியா) மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் ஆண்டி ரோட்டிக் (அமெரிக்கா), மிகலை(ரஷியா) எதிர் கொள்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமைச்சர்கள் மூது}ர் நகரில்
Next post யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருட்கள்