குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பது பாலியல் குற்றமாகாதா?..!!
ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார்.
காவல்துறையினர் இந்த வழக்கை மூடிய நிலையில், வழக்கு விசாரணையை மீண்டும் தொடர ஜினா மனு ஒன்றினை போட்டுள்ளார். இதற்காகத் தான் நடத்திய போராட்டத்தினை விளக்குகிறார் ஜினா.
ஜூலை 8, 2017-ம் ஆண்டு லண்டனின் ஹைட் பார்க்கில் நடந்த இசை திருவிழாற்கு நானும் எனது சகோதரியும் சென்றிருந்தோம். பெரும் கூட்டத்திற்கு நடுவில், இசை கொண்டாட்டத்திற்காக காத்திருந்தோம்.
எங்களது அருகில் வந்த இரண்டு நபர்கள், எங்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். அதில், கருமை நிற முடி கொண்ட ஒருவன் என்னை மேலும் கீழுமாக பார்த்ததுடன், என்னைப் பற்றி அவனது நண்பனிடம் கூறி நகைத்தான். அந்த மோசமான சம்பவம் அப்போது தான் நடந்தது என நினைக்கிறேன்.
அந்த பகல் நேரத்தில், அவன் எனது கால்களுக்கு இடையில் மெபைலை வைத்துள்ளான். பிறகு, எனது குட்டைப் பாவாடைக்கு கீழே மொபைல் கேமராவை நிறுத்தி புகைப்படம் எடுத்திருக்கிறான்.
நான் இசை நிகழ்ச்சிக்கு ஆர்வமாக காத்திருந்ததால், அந்த நேரத்தில் அவன் என்ன செய்தான் என்று எனக்குத் தெரிவில்லை. மேடையில் ஓரத்தில், இரண்டு நபர்கள் மொபைலை பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததை எனது ஓரக் கண்ணால் பார்த்தேன். எனது குட்டைப் பாவாடைக்கு கீழே மொபைலை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட நான் உடனே அவர்களைக் கையில் இருந்து மொபைலை பிடுங்கியதுடன், “எனது கால்களுக்கு கிழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துவிட்டார்கள்“ என கத்தினேன்.
அந்த நபர்கள் என்னை இறுக்கமாகப் பிடித்து, மொபைலை திரும்ப தரும்படி கேட்டார்கள். ஆனால், நான் சற்றுமுன் பேசிக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம் மொபைலை கொடுத்தேன்.
மொபைலை தருமாறு, அப்பெண்ணிடமும் சென்று சண்டை போட்டார்கள். இதனால், திரும்பவும் மொபைலை நானே வாங்கிக்கொண்டு கூட்டத்தினுள் ஓடினேன்.
“ எனது போனை திரும்பக் கொடு“ என கத்திக்கொண்டு அந்த நபர் என்னைப் பின் தொடர்ந்து வருவதை உணர்த்தேன். பாதுகாவலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவுடன், நாங்கள் அனைவரும் ஓடுவதை நிறுத்தினோம். சம்பவத்தைச் சொன்னவுடன், மொபைலை தன்னிடம் தருமாறு பாதுகாவலர் கேட்டார். நானும் கொடுத்தேன்.
சிறிது நேரத்தில்ஓர் ஆண் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் அங்கு வந்த போது, என்னால் முடிந்த அளவுக்கு என்ன நடந்தது என்பதை விளக்கினேன். புகைப்படம் எடுத்த நபர்களிடம் இரண்டு நிமிடம் அவர்கள் தனியாக பேசினார்கள்.
பிறகு என்னிடம் வந்த ஆண் காவல் அதிகாரி,“துரதிருஷ்டவசமாக, நான் அந்தப் படத்தை பார்க்க வேண்டியதாயிற்று. அது கிராபிக்ஸ் படம் இல்லை என்பது தெரிகிறது. நான் நேர்மையாக நடந்துகொள்வேன்.“ என்றார்.
சம்பவம் குறித்து வாக்குமூலம் தரும்படி என்னிடம் கேட்டார். அப்போது என்னால் எதையும் செய்யமுடியவில்லை. இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருக்க வேண்டிய நான், குழப்பத்தில் அழுதுகொண்டிருந்தேன்.
அவர்களை மிரட்டி, `புகைப்படத்தினை அழித்துவிட்டோம்` என காவல்துறையினர் என்னிடம் உறுதியளித்ததுடன், பிரச்சனையையும் முடித்துவைத்தார்கள். அந்தக் கட்டத்தில் நான் இருந்த குழப்பத்தின் காரணமாக, அப்புகைப்படம் எனக்கான ஆதாரம் என்பது எனக்குத் தோன்றவில்லை.
ஐந்து நாட்களுக்குப் பிறகு தொலைப்பேசியில் என்னை அழைத்த காவல்துறையினர், புகைப்படங்கள் அழிக்கப்பட்டது என உறுதியளித்ததுடன் வழக்கையும் மூடி விட்டதாகக் கூறினார்கள்.
அப்போது தெளிவான மனநிலையில் நான் இருந்ததால், காவல்துறையினர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட எனக்கு இது திருப்திகரமாக இல்லை.
சில நாட்கள் கழித்து, அந்த நபர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். இதன் மூலம் அவர்களை சங்கடப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அவர்கள் யார் என்ற தகவலை என்னிடம் யாராவது கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் எனது பதிவு வைரலாக பரவியது. இதே போன்ற மோசமான அனுபவித்ததை மற்ற பெண்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
வெறுப்பும், ஆதரவும் கலந்த கருத்துக்கள் எனக்கு வர ஆரம்பித்தன. இனி நீண்ட பாவாடை அணியுமாறு சிலர் என்னிடம் கூறினார்கள். நான் விளம்பரத்திற்காக இதனைச் செய்வதாக சிலர் கூறினார்கள்.
மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என `கேர்2` மூலம் மனு ஒன்றினை போட்டேன். அந்த மனுவில் எனக்கு ஆதரவாக இதுவரை 50,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காகப் போராடும் குழுக்கள் உதவியால் இந்த வழக்கைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவும் என நம்புகிறேன்.
குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பதை “பாலியல் குற்றங்களாக“ வரையறுக்கும் வரை என் போராட்டம் தொடரும்.
இவ்வாறு தனது மன உணர்வுனை ஜீனா விளக்கிக் கூறினார்.
Average Rating