நின்று போன இதயம்… சைகை மொழியில் பேசி அசத்திய ஓராங்குட்டான் மரணம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 33 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90சைகை மொழியில் பேசி அசத்திய ஓராங்குட்டான் இதய நோயால் உயிரிழந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டது ஒராங்குட்டான் குரங்கு. இந்த ஒராங்குட்டான் ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் பிறந்தது.

சான்டெக் 39 வயதை கடந்த ஆண் ஒராங்குட்டானாகும். சான்டெக் மற்ற ஒராங்குட்டான்களை காட்டிலும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டது.

மேலும் இந்த ஒராங்குட்டான் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஊழியர்களிடம் சைகை மொழியில் சிறப்பாக பேசி வந்தது. தனது அறையை தானே சுத்தம் செய்து ஊழியர்களை அசத்தியது இந்த சான்டெக்.

அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

திஏப் வென்ட் டூ காலேஜ் என்ற அந்த ஆவணப்படத்தில் சான்டெக்கின் செயல்பாடுகள் தெளிவாக காட்டப்பட்டிருக்கும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து டைரி குயின் ரெஸ்டாரென்ட்டுக்கு செல்லும் வழியையும் சான்டெக் காட்டுவது போல் அந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

1997ஆம் ஆண்டு அட்லாண்டா மிருக காட்சி சாலைக்கு இந்த ஒராங்குட்டான் கொண்டுவரப்பட்டது. பார்வையாளர்களிடம் சைகை மொழியில் பேச வெட்கப்படும் இந்த ஒராங்குட்டான் பணியாளர்களிடம் சரளமாக சைகை மொழியில் பேசி வந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த சான்டெக்கு நேற்று உயிரிழந்தது. சான்டெக் மரணம் அட்லாண்டா மிருக காட்சி சாலைக்கு பேரிழப்பு என நிர்வாகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்..!!
Next post கட்டிலில் இப்படி நடந்துகிட்டாதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்…!!