சாய் பல்லவியை பாராட்டிய சமந்தா..!!

Read Time:1 Minute, 37 Second

201708081700256129_Samantha-Praises-Sai-Pallavi_SECVPF‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி மலையாளத்தில் நடித்து, தென் மாநில ரசிகர்களிடம் மலர் டீச்சர் ஆக இடம் பிடித்தார்.

இப்போது தெலுங்கில் இவர் நடித்த ‘பிடா’ படத்துக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு பட உலகிலும் சாய் பல்லவிக்கு தனி மவுசு ஏற்பட்டு இருக்கிறது.

‘பிடா’ படம் சிறிய பட்ஜெட்டில் தயார் ஆனது. ஆனால் ஒரு வாரத்திலேயே வசூல் ரூ.40 கோடியை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தயாரிப்பு தரப்புக்கு ரூ.25 கோடி வரை பங்குத் தொகையாக கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா இந்த படத்தை பார்த்துவிட்டு சாய் பல்லவியை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். இது பற்றி கூறியுள்ள அவர்…

“ ‘பிடா’ படம் மிகவும் புத்துணர்வை தருகிறது. அற்புதம்… உண்மையான படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள். ‘பிடா’வில் சகலமும் சாய் பல்லவி தான். இதற்கு மேல், இனி ஒரு படத்தில் சாய்பல்லவி இருக்கிறார் என்றால் நிச்சயம் அதை பார்க்கலாம். அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்” என்று புகழ்ந்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலோக பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் அதிசய மனிதர்..!! (வீடியோ)
Next post காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு..!! (கட்டுரை)