5 மணி நேரம் 5 ஆண்கள்: தலையில் எழுதப்பட்ட விதியா?..!!
பாலியல் தொழில் செய்வதற்காக இந்த உலகில் எந்த ஒரு பெண்ணும் பிறப்பதில்லை. மாறாக, தனது வாழ்நாளில் அவள் சந்திக்கும் மோசமான சூழ்நிலைகளே அந்த பாதைக்கு வழிவகுக்கின்றன.
ஒரு முறை அந்த தொழிலுக்குள் சென்றுவிட்டாள், அதிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களின் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதுபோன்று பாலியல் தொழிலாளிகளாக்கப்படுவதற்கு, ஒரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டினாலும், டெல்லியில் உள்ள Perna சமூகத்தை சேர்ந்த பெண்களின் தலையெழுத்தை பாலியல் தொழிலாளிகள் என்றே பிரம்மன் எழுதியுள்ளார் போல….அதனால் தான் அந்த இனத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் வாழையடி வாழையாக பாலியல் தொழிலை செய்து வருகிறார்கள். இந்த இனத்தில் எந்த பெண்ணும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு பெண்ணும் குரல் கொடுப்பதில்லை, ஏனெனில் அது தான் தங்களின் தலைவிதி என்று நினைத்துக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
ராணியின் விதி
அதிகாலை 2 மணிக்கு கண் விழிக்கும் ராணி தன்னை அலங்காரம் செய்துகொண்டு, தன்னை தேடி வரும் வாடிக்கையாளர்களின் உடலை குளிர்விக்க சென்றுவிடுவார். சுமார் 5 மணி நேரத்தில் 5 வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த வேண்டும்.
அதில் கிடைக்கும் வருவாயை எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பும் ராணி, தன்னுடைய 5 குழந்தைகள் மற்றும் கணவருக்கு காலை உணவை தயார் செய்து கொடுத்துவிட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுவாள்.
திருமணம் முடிந்து 5 குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர், குடும்ப வறுமையால் பாலியல் தொழிலுக்கு சென்றேன்.
இந்த தொழிலை செய்யும்படி எனது கணவரும் என்னை வற்புறுத்தினார். இதனை ஒரு தொழிலாகத்தான் பார்த்து வருகிறேன், எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் இந்த தொழிலை செய்கிறேன், இது மட்டுமே எனது மனதில் உள்ளது.
ஆனால், நான் செய்த தொழிலை எனது குழந்தைகளும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக தெளிவாக உள்ளேன் என கூறியுள்ளார்.
ஹார்பாய்
எங்கள் இனத்தை சேர்ந்த எல்லா பெண்களும் பாலியல் தொழிலில் மிக சுலபமாக ஈடுபடுவார்கள். இந்த தொழில் ஒரு பரம்பரை தொழில் போன்று ஆகிவிட்டது. எனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால், உறவினர்களுடன் வசித்துவந்தேன்.
சிறுவயதில் டெய்லரிங் கற்றுக்கொண்டதால் அந்த தொழிலை செய்துவந்தேன். எனக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் நான் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என எனது கணவர் வற்புறுத்தியதால் இந்த தொழிலை செய்தேன்.
நாளடைவில் எனது கணவர் இறந்துவிட்டதால், நிரந்தரமாக இந்த தொழிலை செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த தொழிலில் கிடைக்கும் வருவாயின் மூலம் எனது பிள்ளைகளை காப்பாற்றி வருகிறேன்.
ஒரு வேலை எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால், அவர் எனது பிள்ளைகளையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தியிருப்பார் என கூறியுள்ளார்.
இந்த தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதற்காக இடைத்தரகர்களும் உள்ளனர். ஒரு பெண் ஒரு இரவுக்கு 10 ஆண்களை திருப்திபடுத்த வேண்டும். குறைந்த பட்சம் 200 ஆண்களோடு போராட வேண்டிய நிலையும் ஏற்படும்.
டெல்லியில் ஏதேனும் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தால் அது தலைப்பு செய்தியாகிவிடும், ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் தினம் தினம் கற்பழிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து, வெளிப்படையாக பேசுவதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை, காரணம் அதுவே எங்களது விதி என நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
Average Rating