அடிக்கடி அசைவம் சாப்பிடலாமா?..!!

Read Time:2 Minute, 9 Second

201708060819113896_like-to-eat-non-veg_SECVPFசிலர் அசைவ உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அனுதினமும் ஓர் அசைவ உணவு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள்.

ஆனால் அடிக்கடி அசைவ உணவு உண்பது சரிதானா?

நிச்சயமாக சரியில்லை. இதனால் அந்த உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்துக்களின் அளவு அதிகமாகி, அவை நம் உடலில் தேங்கிப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மேலும் அதிகம் அசைவ உணவு உண்பதால், உடல் பருமன் அதிகமாகும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும், சர்க்கரை நோய், இதய நோய்களை உண்டாக்கும்.

அசைவ உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்குக் காரணமாகிறது.

தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும்போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் அதனுடைய முழுமையான செயல்பாட்டை இழக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கோழிகளின் வளர்ச்சி மற்றும் அதிக எடைக்காக ஈஸ்ட்ரோஜென் எனும் ஊசி போடப்படுகிறது. எனவே அதைச் சாப்பிடும் பெண்கள், இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சினைகள், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?..!!
Next post தாய்ப்பாலின் அவசியம்: ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் நிகழ்த்திய சாதனை..!!