நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்தில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

Read Time:3 Minute, 19 Second

IN.NilakkariSurangam.jpgஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி ஆனார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் சுரங்கத்தின் சுவர் சேதம் அடைந்து சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சுரங்கத்திற்குள் விஷவாயு கசிவும் ஏற்பட்டது.

தீக்காயங்களுடன் 4 பேர்

இதைத்தொடர்ந்து, பாரத் நிலக்கரி நிறுவனம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 4 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் சுரங்கத்திற்குள் இருந்து தப்பித்து வெளியே வந்தனர். மயக்க நிலையில் இருந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் தீக்காயங்களுடன் வந்ததால் சுரங்கத்திற்குள் தீப்பிடித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் சுரங்கத்திற்குள் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

மீட்க போராட்டம்

உள்ளே சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 50 தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர். சுரங்கத்தின் சுவரில் துளை போட்டு உள்ளே சிக்கி இருப்பவர்களுக்கு சுத்தமான காற்றை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-மந்திரி அர்ஜ×ன் முண்டா அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

50 தொழிலாளர்கள் பலி

ஆனால் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடியும் பலன் இல்லை. தீவிர முயற்சிக்கு பின் நேற்று மாலை 30 பேரை பிணமாக மீட்டனர். மற்ற 20 பேரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே அவர்களும் இறந்து இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்து பற்றி இலாகாபூர்வ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக நிலக்கரி துறை மந்திரி சிபுசோரன் தெரிவித்தார். அவரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

IN.NilakkariSurangam.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிக்கோலாய், ஃபெடரர் அரையிறுதிக்கு தகுதி!
Next post உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் இணைகிறார்