பெண்கள் கஞ்சா அடிப்பதை தட்டி கேட்ட நபர்: நேர்ந்த சோகம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 11 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ரயில் பயணத்தின் போது கஞ்சா போதை பொருளை உபயோகப்படுத்திய 2 பெண்கள் உட்பட 7 பேரை தட்டி கேட்ட நபரை எல்லோரும் சேர்ந்து அடித்து உதைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Dallas நகரில் உள்ள ரயில் நிலையத்தை நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ரயில் உள்ளே கணிசமான அளவில் பயணிகள் இருந்துள்ளனர். அப்போது 2 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என ஏழு பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதை பொருளை பயன்படுத்தியுள்ளனர்.

இதை பார்த்த Kennan Jones என்ற பயணி அவர்களிடம், இப்படி பொது இடத்தில் ஏன் போதை பொருளை பயன்படுத்துகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த அந்த கும்பலை சேர்ந்த பெண் Kennan முகத்தில் எச்சில் துப்பியுள்ளார்.

உடனே, Kennan அந்த பெண்ணிடம், நீ பெண்ணாக இருப்பது உன் அதிர்ஷ்டம். நான் பெண்களை அடிப்பதில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த 7 பேர் கொண்ட கும்பல் Kennan-ஐ சரமாரியாக அடித்து துவைத்தார்கள்.

ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து நின்ற பின்னரும், 7 பேரும் சேர்ந்து Kennan- தரையில் போட்டு அடித்துள்ளார்கள்.

சில நிமிடங்களில் ரயில்வே பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவே தப்பி ஓடியுள்ளனர்.

இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

காயமடைந்துள்ள Kennan தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொலிசார் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரையும் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிசில் இருந்து தப்பிக்க நாயின் காதை கடித்த இளைஞர்..!! (வீடியோ)
Next post புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பெறுவது எப்படி..!!