இணைய விளையாட்டிற்காக தற்கொலை செய்துக்கொண்ட சிறுவன்..!!

Read Time:2 Minute, 28 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90இனி நீங்கள் என் புகைப்படத்தை மட்டுமே காணமுடியும் என்று சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து 14 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளூ வேல் சேலஞ் (Blue Whale challenge) எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும்.

நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படும்.

பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான 50வது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் படி டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்நிலையில், இந்த விபரீத விளையாட்டில் பங்கேற்று விளையாடிய மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவன், போட்டியின் 50வது நாளில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபரீத விளையாட்டால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இப்போட்டியில் விளையாடி இதுவரை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸில் பிந்து மாதவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..!!
Next post ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பமும் ஓவியாவை ஒதுக்க, ஓவியா கொடுத்த பதிலடி..!! (வீடியோ)