இணையப் பயன்பாட்டில் ஆண்களை முந்தி நிற்கும் பெண்கள்..!!

Read Time:2 Minute, 24 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90இந்தியாவில் இணையம்ப யன்படுத்துவோர் சார்ந்த அறிக்கை ஒன்றை ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப’ எனும் ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 40-சதவிகிதம் பேர் பெண்கள், அதிலும் 33 சதவிகிதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இணையப் பயன்பாட்டினை பெண்கள் தொலைபேசி மூலமே அதிகளவு பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் இணையம் பயன்படுத்துவோரில் ஐந்தில் நான்கு பேர் தொலைபேசி மூலமாகவே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3ஜி இணைப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடிகளாக அதிகரிக்க சுமார் எட்டு ஆண்டுகள் ஆனது. இந்தநிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் 10 கோடி பேர் சுமார் ஏழு மாதங்களில் இணைந்துள்ளனர்.

மேலும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்ட தகவல்களின் படி 2014-2016 வரையிலான காலகட்டத்தில் ஒன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. தற்சமயம் சுமார் 8 முதல் 9 கோடி பேர் ஒன்லைன் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.

இவர்கள் ஆண்டிற்கு சராசரியாக 4,500 கோடி முதல் 5,000 கோடி டொலர்களை செலவிடுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு வரை அதிகரித்து சுமார் 50,000 கோடி டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2025-ம் ஆண்டு வாக்கில் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 30 முதல் 35 சதவிகிதமாக இருக்கும் என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பை கண்டால் படைதான் நடுங்கும் பையன் அல்ல….!! (வீடியோ)
Next post ‘பெப்சி’ தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து..!!