முகத்தில் தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கா..? ஈஸியாக விரட்டலாம்..!!
ஒரு சிலருக்கு மச்சங்கள் பிறப்பிலேயே இருக்கும். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்வர்.
சிலருக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கும். அழகைக் கெடுக்கும் வகையில் கூட அவை இருக்கும்.
ஆனால் மச்சத்தை விரட்டுவது சாதாரண காரியமன்று. இருப்பினும் முறையான மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றினால் மச்சத்தையும் கூட அகற்ற முடியும். நமது தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிற செல்கள் ஒரு இடத்தில் அதிகமாக சுரந்தால் சேர்ந்தால் வருவதுதான் மச்சம்.
அதேசமயம், அதிக அளவில் சேர்ந்தால் அதாவது மச்சம் வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும். காரணம் அது தோல் புற்றுநோயாக இருக்கலாம்.
இத்தகைய மச்சங்களை எளிமையான வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி ஈஸியாக நீக்கலாம்.
1. கொத்தமல்லி இலையை நன்கு அரைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் செய்து, மச்சம் உள்ள இடத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின்பு கழுவலாம். இதனை தினமும் செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
2. பூண்டு மற்றும் கிராம்பை சற்று அரைத்து மச்சம் உள்ள இடத்தில் வைத்து 30 நிமிடம் கட்டிவிட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் மச்சமானது மறையலாம்.
3. வெள்ளை எருக்கு செடியின் சாற்றை மச்சம் இருக்கும் இடத்தில், இரவில் படுக்கும் முன் தடவி படுக்க வேண்டும். பின் காலையில் எழுந்து அதனை மறக்காமல் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்களானது நாளடைவில் மறையும்.
4. பேக்கிங் சோடாவுடன் சிறிது ஆமணக்கெண்ணெயை ஊற்றி பேஸ்ட் போல் செய்து, படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும்.
5. மச்சம் உள்ள இடத்தில் ஆமணக்கெண்ணெயை வைத்து தினமும் இரண்டு முறை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மச்சமானது மென்மையடைந்து, சருமத்தில் இருந்து போய்விடும். மேலும் இது அரிப்பையும் தடுக்கும்.
6. முருங்கையின் சதைப்பகுதியை எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, மச்சத்தின் மீது தடவ வேண்டும். முக்கியமாக அந்த கலவையை தேய்க்கக் கூடாது.
7. மச்சத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு ஆப்பிள் சாற்றை காட்டன் கொண்டு தடவ வேண்டும். பிறகு அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், மச்சம் காணாமல் போய்விடும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், உடலில் அதிகமாக இருக்கும் மச்சத்தை நீக்கி அழகைக் கூட்டுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating