அமெரிக்க பட்ஜெட்டில் பின்லேடனை பிடிக்க ரூ.1000 கோடி பணம்
பின்லேடனை பிடிக்க அமெரிக்க புலனாய் வுத்துறையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அவனை பிடிக்க ரூ.1000 கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கி உள்ளது. சர்வதேச தீவிரவாதி பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க விமானங்களை கடத்தி நிïயார்க்கின் உலக வர்த்தகமைய கட்டிடத்தை தகர்த்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகையே இது அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
பின்லேடனை பிடிக்க அமெரிக்க படையினர் பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பின்லேடனை பிடிக்க அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏ.யில் தனிப்பிரிவு அமைக்கப்படுகிறது. அமெரிக்க செனட் சபையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதே போல பின்லேடனை பிடிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கவும் செனட் சபையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு மொத்தம் ரூ.46900 கோடி டாலர் ஒதுக்கப்படுகிறது. இதில் 6300 கோடி டாலர் ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. போதை பொருள் ஒழிப்புக்காக ரூ.3220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பின்லேடன் 2001 செப்டம்பர் 11-ந் தேதி நிïயார்க் உலக வர்த்தகமைய கட்டிடம் மீது தாக்குதல் நடப்பதற்கு முன் தனது அல்கொய்தா இயக்க தீவிரவாதிகளுடன் ஆலோசனை நடத்தியதன் வீடியோ காட்சியை அல்ஜகிரா டெலிவிஷன் ஒளிபரப்பியது. மலைப் பகுதி ஒன்றில் பின்லேடன் முக்கிய தளபதிகளுடன் தாக்குதல் குறித்து அதில் ஆலோசனை நடத்துகிறான். எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்று 11 தீவிரவாதிகளுக்கு அவன் பயிற்சி கொடுக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...