உங்கள் மொபைல் பற்றரி வெடிக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள்..!!

Read Time:3 Minute, 55 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில் கேஜெட்டுகள் தவழும் இத்தருணத்தில் நாம் தெளிவை பெற்றே ஆக வேண்டும்.

இம்மாதிரியான பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது. கேலக்ஸி நோட் 7 வெளிப்படையாக தீப்பிடிக்கும் வாய்ப்புக்கள் இருந்தது அண்மையில் ஒரு சாம்சங் கேலக்ஸி ஜே5 கருவி வெடித்தது. அப்படியாக உங்கள் சாம்சங் பேட்டரி பாதுகாப்பாக உள்ளதா.? அதை செக் செய்வது எப்படி.?

பொதுவான ஒரு காரணம்

இது மிகவும் பொதுவான ஒரு காரணம் தான் அதாவது நீங்கள் சாதாரணமாக போன் பயன்படுத்தும் போதும் கூட பேட்டரி அதிகமாக சூடாகி வெப்பத்தை வெளிக்கொணர தொடங்குகிறது என்றால் மற்றும் சாதனம் சார்ஜ் செய்யும் போது அதீத சூடாகிறது என்றால் உங்கள் பேட்டரியை மாற்றி விடுவது நல்லது.

ஸ்பின் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

உங்கள் பேட்டரியை எடுத்து ஒரு தட்டையான பரப்பில் கிடைமட்டமாக வைக்கவும். இப்போது, ஒரு பக்கமாக பேட்டரி சுற்ற முயற்சி செய்யவும்.பேட்டரி சுழல்கிறது என்றால், அதன் ஒருபக்கம் வீக்கமாக உள்ளது என்று அர்த்தம். உடனே நீங்கள் அந்த பேட்டரியை மாற்றி விடுவது நல்லது.

வெளிப்புற பாதிப்பு

குறிப்பாக சாம்சங் பொருட்களுக்காக பயன்பட வடிவமைக்கப்பட்டுள்ள சாம்சங் நிறுவனத்தின் உண்மையான அல்லது ஒப்புதல் பேட்டரிகள் பயன்படுத்துவது மிக நல்லது. இன்கம்ப்பட்டபிள் பேட்டரிகள், கேபிள்கள், சார்ஜர்கள் ஆகியவைகளை பயன்படுத்துவது வெளிப்புற பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக அங்கீகரிக்கப்படாத பேட்டரி வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்

வீக்கம்

சில நேரங்களில் பேட்டரி மோசமான நிலைக்கு செல்லும் போது, உள் செல்கள் முறிவு ஏற்பட்டு பேட்டரி வீக்கம் ஏற்படும். பேட்டரி வீக்கம் ஏற்படுவதை நீங்கள் பார்த்தல் அதை உடனடியாக மாற்றி விடவும். பேட்டரியை போனுக்குள் பொருத்தும் ஒவ்வொரு முறையும் அதை சோதிப்பது நல்லது.

2 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதம்

உங்கள் போனின் பேட்டரி எவ்வாறு, எந்த அளவில் குறைகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதம் குறைய வாய்ப்பில்லை மீறி குறைந்தால் உங்கள் பேட்டரி பலவீனமானதாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீத்தின் ஆசை பட நாயகியின் தற்போதைய நிலை…!!
Next post அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா?..!! (கட்டுரை)