இந்த பாலத்தை புதிய உலக அதிசயமாக அறிவிக்கலாம்: கலாய்த்த நீதிபதி..!!

Read Time:2 Minute, 8 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைப்பு சாலையில் உள்ள பாலம் பழுதடைந்து உள்ளதால், இது புதிய உலக அதிசயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கிண்டலடித்து உள்ளது

நாமக்கல் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கும் சாலையில் காவிரி ஆற்றுப்பாலம் இப்போவோ அப்போவோ என உடையும் நிலையில் மிக மோசமாக உள்ளது.

பாலத்தின் சில தூண்கள் உடைந்து தொங்கும் பாபிலோன் தோட்டம் போல காட்சியளிக்கிறது

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது..

இது தொடர்பாக ஆணை பிறப்பித்த நீதிபதி கிருபாகரன், பழங்கால நினைவுச்சின்னம் கூட தோற்றுவிடும் அப்படி உள்ளது இந்த பாலம்.

பாபிலோன் தொங்கும் தோட்டம் போல காட்சியளிக்கும் இப்பாலத்தை, புதிய உலக அதிசயம் என கூட அறிவிக்கலாம்..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் தலை நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது.

1500 ஆண்டுகளுக்கு முன்னால் கரிகாலன் கட்டிய கல்லணை கம்பீரமாய் அயல்நாட்டவர்களுக்கு சாவல் விடும் வண்ணம் உள்ளது..

ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இப்பாலம் இப்போதோ அப்போதோ என உடையும் நிலையில் ஆட்டம் கண்டுவிட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இப்பாலம் தொடர்பாக 20 கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு இன்னும் 6 வாரங்களில் தெளிவான பதில் தரவேண்டும் என சமந்தப்பட்ட அதிகாரகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்களின் மாஸ் குத்தாட்டாம்: செம்ம வீடியோ..!!
Next post செக்ஸ் இன்பங்கள் எப்படி என்ன செய்யும் ?..!!