செக்ஸ் இன்பங்கள் எப்படி என்ன செய்யும் ?..!!

Read Time:4 Minute, 49 Second

17-1366183153-sex-actress-leec-600-400x300காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? என்று கேட்டிருப்பார் ஒரு கவிஞர். உடம்பில் சுரக்கும் காதல் ஹார்மோன்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்கிறதாம்.

மூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறதாம் எனவே இதனை காதல் ஹார்மோன் என்று செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

இந்த ஹார்மோன் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. குழந்தை பிறப்பு, மனஅழுத்தம் போக்குவது, உள்ளிட்ட 11 வகையான நன்மைகளை செய்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்த ஹார்மோன் செய்யும் மாயம் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

எங்கு சுரக்கும் ஆக்ஸிடோசின்? மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப்போதலாமஸின் பராவென்ட்ரிகுலர் உட்கருவில் சுரக்கிறது ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்.

காதல் அதிகமாகும் தாம்பத்ய உறவிற்குப் பின்பு பெண்களுக்கு ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் கணவர் மீதான காதல் அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதனால் உறவு முடிந்த பின்னரும் கணவரை கட்டிக்கொண்டு உறங்குவது. முத்தம் கொடுப்பது என அன்பால் திணறடிக்கின்றனராம்.

காதல் உணர்வுகள் மனிதர்களின் காம உணர்வுகளை கிளர்ச்சியடையச் செய்கிறது. மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி தம்பதியர் காதலர்கள் இடையேயான உறவை, பிணைப்பை அதிகரிக்கிறது. அடிக்கடி கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.

பிரசவம் எளிதாகும் கர்ப்பகாலத்தில் சுரக்கும் “ஆக்ஸிடோசின்” ஹார்மோன், கர்ப்பப்பைக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. பெண்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு பிரசவ காலத்தில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து எளிதான பிரசவத்தை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் தாய்க்கும், சேய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்

உறவுப் பிணைப்பை அதிகரிக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையேயான உறவுப்பிணைப்பினை அதிகரிக்கும். நேசத்தோடு பழகுவதற்காக சூழலை உருவாக்கும்.

நல்ல உறக்கத்தை தரும் மனஅழுத்தம் சிலருக்கு மிகப்பெரிய பிரச்சினையை தரும். தூக்கத்தைக் கூட கெடுக்கும். இந்த ஆக்ஸிடோசின் சுரப்பு மனஅழுத்தம் தரும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. நன்றாக உறக்கத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

அச்சமற்ற உணர்வு ஆக்ஸிடோசின் சுரப்பதின் மூலம் மனிதர்களின் அச்சம் நீங்குகிறதாம். விலங்குகளிடையே நடத்தப்பட்ட சோதனையில் அவைகள் அதீத பாதுகாப்பு உணர்வுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்புகளை அதிகரிக்கிறது மனிதர்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் திறமையை தருகிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இந்த ஆக்ஸிடோசின் சுரப்பை தூண்டுவதன் மூலம் அவர்களின் தனித்தன்மையை வெளிக்கொணரலாம். திறமைசாலியாக உயர்வார்கள்.

போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பு கொகைன், மதுப் பழக்கம், போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு அதைக் குறைப்பதற்கான பல வழிமுறைகளை ஆக்ஸிடோசின் ஏற்படுத்தித் தருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பாலத்தை புதிய உலக அதிசயமாக அறிவிக்கலாம்: கலாய்த்த நீதிபதி..!!
Next post கைகளின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்..!!