செயல்படாத கால்கள்: தளராத தன்னம்பிக்கை! இளைஞரின் வீடியோ..!!

Read Time:2 Minute, 3 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருகால்களும் செயலிழந்த நபர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வெளியிட்டுள்ள வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு Virginia மாகாணத்தை சேர்ந்தவர் Patrick Stubblefield (30) இவருக்கு சிறுவயது முதலே பெருமூளை வாத நோய் இருந்துள்ளது.

இதனால் Patrick-ஆல் நடக்க முடியாது. தரையில் ஊர்ந்து தான் செல்ல வேண்டும். சமீபத்தில் முழங்காலில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக அவருக்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஆப்ரேஷன் நடந்துள்ளது.

இதனிடையில், தனது கால்கள் செயலிழந்து விட்டாலும், கைகளை தரையில் ஊன்றி பின்னர் ஊர்ந்து சென்று காரின் உள்ளே யார் உதவியும் இன்றி தானே ஏறி உட்காரும் வீடியோவை Patrick வெளியிட்டுள்ளார்.

இது குறித்து Patrick கூறுகையில், நான் தற்போது வசிக்கும் வீட்டில் நான் அமர்ந்து செல்லும் வீல் சேரை நகர்த்தி செல்ல சரிவுப்பாதை அமைக்கப்படவில்லை.

அதனால் நான் தவழ்ந்து தான் செல்கிறேன். என் போல் வீல் சேரில் பயணிக்கும் ஊனமுற்றவர்களுக்கு ஏற்றவாறு வீடுகளில் சரிவுப்பாதை அமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே வீடியோவை வெளியிட்டுள்ளேன்.

இது குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஊனமானவர்களுக்கு வீடு கொடுக்கவே பலர் தயங்குகிறார்கள். இது மாற வேண்டும் என Patrick கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்…. படங்களை பார்த்தால் மிரண்டுவிடுவார்கள்..!!
Next post ஓவியா அழுத ஒரு பாட்டிற்கு இப்படி ஒரு மவுசா? வேற லெவல் ரீச்..!!