அடிக்கடி குதிகால் வலிக்கிறதா? சரிசெய்ய என்ன செய்யலாம்?..!!

Read Time:2 Minute, 6 Second

201707221440241199_how-to-get-rid-crack-heels_SECVPF-400x300பெரியவர்களுக்கு வரும் குதிகால் வலியானது பாதத்தின் பின்புறமோ, உள்ளங்காலின் உள்புறமோ அல்லது பின்புறமோ ஏற்படலாம்.

குதிகாலின் பின்புற வலி அல்லது வீக்கம் உள்ளவர்கள் மென்மையானசெருப்புகளை பயன்படுத்தி வலியைக் குறைக்கலாம்.

உள்ளங்காலில் உள்ள வலி உள்புறமாக இருப்பின், அது உள்ளங்கால் சவ்வினால் ஏற்பட்ட அலர்ஜி அல்லது தேய்மானத்தினால் இருக்கலாம். இதற்கு உடற்பயிற்சி மூலம் சரிசெய்வது தான் நல்லது.

இந்த பிரச்னை உள்ளவர்கள் வலி சரியான பின்னும், பாதத்துக்கான பயிற்சிகளை கொடுத்து பாதத்துக்கு தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு சிலிக்கான் ஜெல் செருப்புகள் வலியைக் குறைக்க மிகவும் பயன்படும்.

உள்ளங்காலில் வெளிப்புறம் உண்டாகும் வலி உள்ளங்காலில் கொழுப்பின் அளவு மிகக் குறைவினால் வருகிறது. இவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி செருப்புகளை மாற்றலாம். கடுமையானதாக இல்லாமல் மென்மையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

உள்ளங்காலில் பாதத்தின் பின்புறம் வரும் வலியானது, நீரழிவு, உடற்பருமன், ரத்தத்திலோ, சிறுநீரிலோ கிருமிகள் இருந்தாலும் ஏற்படும்.

வாத நோய் இருந்தாலும், சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் பாதத்தின் பின்புறம் வலி வரலாம். இவர்களுக்கு இந்த பிரச்னைகளை சரிசெய்து விட்டால் குதிகால் வலி தானாகவே சரியாகிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை சூடேற்றும் சில மந்திரங்கள் இதோ.! வயது வந்தவர்கள் மட்டும்.!!
Next post கஞ்சா கருப்பு மனைவி பற்றி தெரியுமா?..!! (வீடியோ)