6 மணிநேரம் அசையாத பெண் கலைஞர்… பட்ட அவஸ்தையை வார்த்தையால் கூற முடியாது..!! (வீடியோ)

Read Time:2 Minute, 37 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90மெரினா அப்ராமோவிக் ஒருமுறை சமூக பரிசோதனைக்காக அசையா நிலையில் பொது மக்கள் முன்னிலையில் ஆறு மணி நின்றார். அப்போது, ஒரு மேசை மீது 72 பொருட்கள் வைத்து, அதை பயன்படுத்தி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என கூறினார்.

அந்த ஆறு மணிநேரத்தில் அவர் எதிர்கொண்ட இன்னல்கள், அவலங்கள் சொல்லிலடங்காதவை….

முதலில் மக்கள் அவரது நிற்கும் நிலையை மாற்றினர்.

பிறகு சிலர் அவரை அமர வைத்தனர். சௌகரியமாக உணர அல்ல, அவரை அவமானப்படுத்தி, இழிவுப்படுத்த.

பிறகு சிலர் குண்டூசி கொண்டு, அவரது உடலில் சிலவவற்றை ஒட்டினர்.

ஒருவர் இதை எல்லாம் தாண்டி, பிளேடை எடுத்து அவரது கழுத்தில் அறுத்தார். அப்போதும் கூட மெரினா அப்ராமோவிக் சிறிதளவும் நகரவில்லை.

எல்லாவற்றுக்கும் மேல் சிலர் மனிதத்தன்மையே இல்லாமல், அவரது ஆடையை அவிழ்த்து, அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.

தனது ஆறு மணிநேர அசையா நிலை முடிந்த பிறகு. மெரினா அப்ராமோவிக் தன்னை தவறான முறையில் தீண்டியவர்களை முன் நடந்து சென்றார். ஒருவர் கூட மெரினா அப்ராமோவிக்வின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றனர்.

மெரினா அப்ராமோவிக் இதை ஒரு சமூக பரிசோதனைக்காக தான் செய்தார். அதில் தன்னை தானே உட்படுத்திக் கொண்டார். இதன் மூலம் வாய்ப்புகள் அமைந்தால் மனிதர்கள் எளிதாக அனைவரையும் பாதிப்படைய செய்வார்கள், துன்புறுத்துவார்கள், மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை மெரினா அப்ராமோவிக் வெளிக்கொண்டுவந்தார்.

மேலும், படித்தவர், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இதற்கு இல்லை என்றும், வாய்ப்புகள் அமைந்தால் யார் வேண்டுமானாலும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: சார்மி – முமைத்கானுக்கு மீண்டும் நோட்டீஸ்..!!
Next post உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்..!!