ஆரோக்கியமான இடைவிடாத செக்ஸ் இன்பம்..!!

Read Time:4 Minute, 18 Second

maxresdefault-4-450x253தாம்பத்ய உறவில் தினசரி ஈடுபடுபவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களின் விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்.

திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்திலும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனர். அது சில ஆண்டுகளில் படிப்படியாக குறைந்துவிடுகிறது.

சந்தோசத்தை தந்த தாம்பத்ய உறவு கடைசியில் சம்பிரதாயமாகவும், கடைசியில் சங்கடமாகவும் மாறிவிடுகிறது. வேலைப் பளு, நோய் பாதிப்பு, குழந்தை பராமறிப்பு என பல காரணங்களினால் செக்ஸ் என்ற ஒரு விசயம் அவசியமற்றதாகிவிடுகிறது. எனவே தம்பதியரிடையை அதிக இடைவெளியின்றி செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறும் அளவிற்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

ஆரோக்கியம் அதிகம்
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் வாஷிங்டனில் அண்மையில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது என்றும் வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வளமான விந்தணுக்கள்
இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைப்பது தவறான கருத்து என்று கூறியுள்ள மருத்துவர், தினமும் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் உடலில் உள்ள பாலியல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்தனு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரத்த ஓட்டம் அதிகமாகும்
தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது என்கிறது ஆய்வு. மேலும் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிப்பதோடு, தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாகிறது என்று கூறியுள்ளார்.

சேதமடையும் டி.என்.ஏக்கள்
ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டி.என்.ஏ.க்கள் அதிகளவில் சேதமடைகின்றன என்றும் இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவெளி வேண்டாமே
தினந்தோறும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் பாதிக்கப்படும், ஆண்மைக் குறைந்துவிடும் என்பதே இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல்லும் காரணமாகும். ஆனால், இது ஒரு தவறான கருத்து என நிரூபித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் ஒருவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சோந்தி ஜூலியை வாயடைக்க செய்த ஓவியா..!! (வீடியோ)
Next post கூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்?… தீர்க்கும் வழிகள்…!!