காரில் அடிபட்டு உயிருக்கு போராடிய குட்டி யானை: காப்பாற்ற போராடிய யானைகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ஜிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்கு போராடிய குட்டி யானையை காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜிம்பாப்வே நாட்டின் Hwange தேசிய வன உயிரியல் பூங்காவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை 69 வயதான Heidi என்ற பெண் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், பூங்காவில் நான் வலம் வந்து கொண்டிருந்த போது, தன்னை வேகமாக கடந்து சென்ற கார் ஒன்று குட்டி யானை மீது வேகமாக மோதி விட்டு சென்றுவிட்டதாகவும், அப்போது அடிபட்ட குட்டி யானையை காப்பாற்ற தாய் யானையும், தந்தை யானையும் போராடியதாகவும், இதைக் கண்ட பிற யானைகளும் உதவியதாகவும் கூறியுள்ளார்.

இதை பார்த்த போது தனக்கு கண்ணீர் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற நினைக்காமல் பெரும்பாலான மனிதர்கள் கடந்து போகும் இந்த காலத்தில், அடிபட்ட குட்டி யானையை காப்பாற்ற யானைகள் போராடிய காட்சி நெகிழ வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் மெரினாவில் போராட்டம் ஓவியாவிற்காக கூடிய மக்களும் பிரபலங்களும்..!!
Next post டெங்கு காய்ச்சல் பரவுகிறது… தடுப்பது எப்படி…?..!!