சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!

Read Time:2 Minute, 6 Second

201707201133362401_kasthuri-manjal-for-skin-whitening_SECVPFசென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால்/தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்.. எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது நல்லது. கஸ்தூரி மஞ்சளை – எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது,
துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.

கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.

கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்.

முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் ஜோடிக்கு நிகழ்ந்த ஜீரணிக்க முடியாத சம்பவம்… காலில் விழுந்து கதறும் காதலன்..!!
Next post 5 வயது சிறுமிக்கு அபராதம் விதித்த அதிகாரி – எதற்கு தெரியுமா?..!!